Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

புதுச்சேரி: `ரூ.10,100 கோடி; தமிழில் கவர்னர் உரை!’ – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட்

புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்கு தயார் செய்து அனுப்பப்பட்ட திட்ட வரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 09.30 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் கவர்னர் உரையை வாசிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 11.15 மணிக்கு துணை சபாநாயகர் தேர்தலும், பதவியேற்பும் நடைபெற இருக்கிறது. துணை சபாநாயகர் பதவிக்கு நெட்டப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான ராஜவேலுவை என்.ஆர்.காங்கிரஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இந்த பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் இவரே போட்டியின்றி செய்யப்பட இருக்கிறார். அதையடுத்து மாலை 4.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2021-21 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வார விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஏழு நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை அலுவல் குழு தெரிவித்திருக்கிறது.

Also Read: தமிழக வேளாண் பட்ஜெட் 2021-22 - பசுமை விகடன் எடுத்த முயற்சி... விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-budget-session-of-newly-formed-government-to-be-held-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக