Ad

திங்கள், 19 ஜூலை, 2021

We Transfer-ல் வெளிநாடு அனுப்பப்பட்ட ஆபாச வீடியோக்கள் - ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பையில் தொழில் செய்து வருகிறார். ஷில்பா ஷெட்டியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது ஆபாச வீடியோ எடுத்து வெளியிட்ட வழக்கில் சிக்கியிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் இணையத்தளத்தில் வெளியிடுவதற்காக ஆபாச படங்கள் எடுத்தது மற்றும் அதனை இணையத்தளங்கள் மற்றும் ஒடிடி தளத்தில் வெளியிட்டது தொடர்பாக நடிகை கஹனா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மலாடில் உள்ள மத் தீவில் போலீஸார் ரெய்டு நடத்தி ஆபாச வீடியோவிற்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

மும்பையில் ஆபாச வீடியோ எடுத்து அதனை வெளிநாட்டை சேர்ந்த கம்பெனிகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். வெளிநாட்டில் இருந்து பல்வேறு மொபைல் ஆப்கள் மற்றும் இணையத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் இவை பதிவேற்றம் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து பதிவேற்றம் செய்தால் இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று கருதி இக்கும்பல் இது போன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆபாச வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட உமேஷ் காமத் என்பவரிடம் விசாரித்தபோது ராஜ் குந்த்ராவிற்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. உமேஷ் இதற்கு முன்பு ராஜ் குந்த்ராவிடம்தான் வேலை செய்து வந்தார். இப்போது வெளிநாட்டை சேர்ந்த படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ராஜ் குந்த்ராவிடம் இருந்தபோது உமேஷ் மாடல் மற்றும் நடிகைகளை ஒருங்கிணைக்கும் புரோக்கராகவும் பணியாற்றி வந்தார். அப்படிப் பணியாற்றிய போது ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்படும் படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி புதிதாக படங்களில் நடிக்க வரும் இளம் நடிகைகளை வலையில் விழ வைப்பது வழக்கம். பின்னர் அவர்களிடம் கஹனா பண ஆசை காட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்துவிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

Also Read: மும்பை: அமிதாப் பச்சன் வீட்டுக்கு வெளியே போராட்டம்! சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுக்க மறுத்தாரா?!

கஹனா வீடியோ எடுத்து அதனை உமேஷிற்கு அனுப்பிவிடுவார். உமேஷ் அதனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ராஜ் குந்த்ராவிற்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீஸாருக்கு போதிய ஆதாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அவரின் பெயரை சேர்க்காமலேயே முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் ஆபாச படத்தை எடுத்த குற்றவாளிகள் அதனை 'We Transfer' மூலம் குந்த்ரா அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் தெரிவித்தார். ராஜ் குந்த்ராதான் இதில் முக்கிய சதிகாரர் என்றும் அவர் தெரிவித்தார். ராஜ் குந்த்ராவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், மும்பை அந்தேரி வீர்தேசாய் ரோட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கமிஷனர் ஹேமந்த் தெரிவித்தார்.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா

செவ்வாய் கிழமை குந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் கஹனா, ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டம் தன் கடமையை செய்கிறது. எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. உண்மையான குற்றவாளி யார் என்பதை கோர்ட் முடிவு செய்யும். இதில் நான் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

ஆபாச வீடியோக்களில் நடிக்க நடிகைகளுக்கு ரூ.20,000 லிருந்து ரூ.25,000 வரை கொடுத்துள்ளனர். குற்றவாளிகள் ஒரு வீடியோவில் 3 லட்சம் வரை சம்பாதித்துள்ளனர்.


source https://cinema.vikatan.com/bollywood/actress-shilpa-shettys-husband-raj-kundra-arrested-in-mumbai-in-porn-video-scam-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக