`அவை தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்!’
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவியது. இந்நிலையில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,11,74,322 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 374. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,14,482-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,03,53,710-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,06,130 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 45,254 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 41,18,46,401 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-20-07-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக