Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

EURO 2020 : இங்கிலாந்தின் இதயங்களை நொறுக்கிய இத்தாலியின் சூப்பர் ஹீரோ டோனருமா… Its gone to Rome!

சமபலம் கொண்ட இரு அணிகள் மோதிய பரபரப்பான யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது இத்தாலி.

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான யூரோ கோப்பையின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் லண்டனில் நடைபெற்றது. 1966-ல் உலக கோப்பையை வென்றபிறகு தொடர்ந்து ஒரு கோப்பைக்காகப் போராடும் இங்கிலாந்து, 53 ஆண்டுகளுக்கு முன்பு யூரோ கோப்பையை வென்ற இத்தாலியுடன் மோதியது.

Its coming home என இங்கிலாந்து ரசிகர்கள் இந்த ஆண்டு யூரோ கோப்பையை மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்றபடி பயிற்சியாளர் சவுத்கேட்டும், கேப்டன் ஹேரி கேனும் இங்கிலாந்தை தொடர்ந்து வெற்றி பெற வைத்து இறுதிப்போட்டிக்குள் கொண்டுவந்து நிறுத்தினர்.

இன்னொருபக்கம் 2018 உலகக்கோப்பைக்குத் தகுதிகூட பெறமுடியாமல் வெளியேறி இத்தாலி கடந்த நான்கு ஆண்டுகளில் அணியை வலுவாகக் கட்டமைத்தது. அதன் பலன் இந்த யூரோ தொடரில் தெரிந்தது. தகுதிச்சுற்றுப்போட்டிகள் உள்பட தோல்வியையே சந்திக்காமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தது இத்தாலி.

harry kane

இதனால் இரண்டு சமபலம் கொண்ட அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதால் உலகக் கால்பந்து ரசிகர்கள் அனைவரும் யூரோ கோப்பையின் முடிவுக்காகக் காத்திருந்தனர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே டிஃபெண்டர் லூக் ஷா முதல் கோலை அடிக்க இறுதிப்போட்டியை அற்புதமாகத் தொடங்கியது இங்கிலாந்து. அதன்பிறகு இத்தாலி ஈக்குவலைசர் கோல் அடிக்கப் பலமுறை முயன்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. முதல் பாதி இங்கிலாந்து முன்னிலைப்பெற 1-0 என முடிந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலிக்கான ஈக்குவலைசர் கோலை அடித்தார் லியோனார்டோ போனூசி.

இதன்பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எக்ஸ்ட்ரா டைமிலும் கோல்கள் விழாததால் இறுதிப்போட்டி பெனால்ட்டிக்குப் போனது. பெனால்ட்டி ஷூட்டை முதலில் இங்கிலாந்து தொடங்கியது. டொமினிகோ பெரார்டி உதைத்தப்பந்து இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டன் பிக்ஃபோர்டைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைய 1-0 என முன்னிலைப்பெற்றது இத்தாலி. இங்கிலாந்தின் கேப்டன் ஹேரி கேன் இங்கிலாந்துக்கான முதல் பெனால்ட்டி ஷூட்டை அற்புதமாக அடிக்க அது இத்தாலி கோல் கீப்பர் டோனருமாவைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது.

england vs italy
england vs italy
england vs italy

இத்தாலியின் இரண்டாவது பெனால்ட்டியை பெலோட்டி அடிக்க அதை அற்புதமாகத் தடுத்தார் இங்கிலாந்தின் பிக்ஃபோர்ட். ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் மாறியது. இங்கிலாந்தின் இரண்டாவது வாய்ப்பை ஹேரி மாகுவேர் கோலாக மாற்ற 2-1 என முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து. இத்தாலிக்கான மூன்றாவது வாய்ப்பை போனுசி கோலாக்கினார். ஆனால், இந்தமுறை இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்ஃபோர்டு தவறவிட்டார். இதனால் தலா மூன்று பெனால்ட்டிகள் முடிந்தபோது இரண்டு அணிகளும் 2-2 என இருந்தன.

இறுதிப்போட்டி இன்னும் பரபரப்பானது. இத்தாலியின் நான்காவது வாய்ப்பை ஃபெடரிகோ பெர்னார்டெச்சி கோலாக்கி 3-2 என முன்னிலைப் பெறவைத்தார். ஆனால், நான்காவது வாய்ப்பையும் இங்கிலாந்து தவறவிட்டது. ஜேடன் சாஞ்சோவின் ஷூட்டை அற்புதமாகத் தடுத்தார் இத்தாலி கோல்கீப்பர் டோனருமா. இங்கிலாந்து ரசிகர்கள் அதிச்சியானார்கள். ஆனால், இத்தாலியின் கடைசி ஷூட்டை பிக்ஃபோர்டு தடுக்க கடைசி வாய்ப்பை கோலாக்கினால் 3-3 பெனால்ட்டி ஷூட் சமனாகும் நிலை உருவானது.

england vs italy
england vs italy

இங்கிலாந்தின் புக்காயோ சாகா இங்கிலாந்துக்காக கடைசி ஷூட்டை எடுத்தார். ஆனால், அவர் பந்தை உதைத்த திசையை சரியாகக் கணித்து டோனருமா தடுக்க யூரோ கோப்பையை வென்றது இத்தாலி!

கியான்லூகி டோனருமா இத்தாலியின் ஹீரோவானார். இந்தமுறையும் கோப்பையை வெல்லமுடியாமல் போனதில் நொறுங்கிப்போனார்கள் இங்கிலாந்து வீரர்களும், ரசிகர்களும்!



source https://sports.vikatan.com/football/italy-beats-england-and-crowned-as-euro-2020-champions-at-london

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக