Ad

திங்கள், 12 ஜூலை, 2021

நீலகிரி: ஆன்லைன் சூதாட்டம்; பறிபோன‌ பணம்! - விபரீத முடிவெடுத்த கொடநாடு இளைஞர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கைக்காட்டி கூடஹல்லா கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் மன்னனின் மகன் சசிக்குமார். 24 வயதான இவருக்கு மனைவி கீதா மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். கொடநாடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் சமையலராக பணியாற்றி வந்தார். நண்பர்களால் அறிமுகமான ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த இவர், ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்துள்ளார். இதை அறிந்த சிவகுமாரின் மனைவி, அவ்வப்போது கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போதும் ஆன்லைன் சூதாட்டத்தை விட முடியாமல் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சிவகுமார்

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில், கொடநாடு செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக உடலை மீட்டனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, உடலை கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து பேசிய கோத்தகிரி போலீஸார், "ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார். எந்த வகையான சூதாட்டம் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kotagiri-youth-commit-suicide-for-online-game

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக