Ad

புதன், 14 ஜூலை, 2021

``பானுசந்தர், ராகவி வரல; ரொம்ப எமோஷன் ஆன இர்ஃபான்..!" - `கனா காணும் காலங்கள்' ரீ-யூனியன் பற்றி ரேகா

குடும்பம், சோகம், அழுகாச்சி போன்ற வழக்கமான கதைக்களத்துக்கு மாற்றாக, `டிரெண்டு செட்'டை ஏற்படுத்திய `கனா காணும் காலங்கள்' தொடர், 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சீரியல். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் துள்ளலான வாழ்வியலைக் காட்சிப்படுத்தி, இளசுகளையும் சீரியல் ரசிகர்களாக மாற்றியது இந்தத் தொடர். நான்கு பாகங்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் மூலமாக அறிமுகமான ரியோ, கார்த்திக் ராஜ், பிளாக் பாண்டி, இர்ஃபான் உள்ளிட்ட பலரும், சின்னத்திரை பிரபலங்களாக ஜொலிக்கின்றனர். காலங்கள் கடந்தும் நாஸ்டால்ஜியா நினைவுகளுடன் பேசப்படும் இந்தத் தொடரில் பணியாற்றிய கலைஞர்களின் சந்திப்புக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடந்தது.

`கனா காணும் காலங்கள்' டீம்

நான்கு பாகங்களிலும் பணியாற்றிய பெரும்பாலானோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொரோனா சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான கலைஞர்களும் இந்த ரீ-யூனியன் சந்திப்பில் கலந்துகொண்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனச் சந்திப்பு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர். இதில் கலந்துகொண்ட நடிகை ரேகாவிடம், கொண்டாட்ட தருணங்கள் குறித்துப் பேசினோம்.

``சினிமாவுல இருந்து பல வருஷங்களா விலகியிருந்த நிலையில, அப்பதான் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சேன். `ஸ்கூல் பசங்களை மையப்படுத்தி வித்தியாசமான கதையுடன் சீரியல் எடுக்கிறோம். இந்த புராஜெக்ட்டுல சில நடிகர்கள் மட்டுமே பரிச்சயமான முகங்கள். அதுல ஒருத்தரா, பாசமான அம்மா ரோல்ல நீங்க நடிக்கணும்'னு கதாசிரியர் ரமணா சார் என்கிட்ட சொன்னார். சம்மதம் சொல்லி, பானுசந்தர் சாருக்கு மனைவியா `கனா காணும் காலங்கள்' முதல் சீஸன்ல நடிச்சேன்.

கனா காணும் காலங்கள் டீம்

பெற்றோர்னாலே கண்டிப்பானவங்கன்னு பேசப்பட்ட காலம் அது. அந்த எண்ணத்தை உடைச்சு, பிள்ளைகள்கிட்ட பெற்றோர் ஃப்ரெண்ட்லியா பழகுறதை ஊக்கப்படுத்துற மாதிரி எங்க ரெண்டு பேரோட ரோலும் அமைஞ்சிருக்கும். வழக்கமான குடும்ப சண்டைகள் எதுவும் இல்லாம, சின்ன பசங்களோடு சேர்ந்து நாங்களும் ஷூட்டிங்ல நிறைய சேட்டைகள் செஞ்சோம். `சின்ன வயசுலயே நடிக்க வந்ததால, உங்கள மாதிரி பதின்பருவ காலகட்டத்தை என்னால மகிழ்ச்சியா கொண்டாட முடியல'ன்னு உடன் நடிச்ச பசங்ககிட்ட ஏக்கத்துடன் சொல்லுவேன்" - 15 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கியவர், ரீ-யூனியன் சந்திப்பு குறித்துப் பேசினார்.

``இளசுகளின் மனசை கொள்ளையடிச்ச இந்த சீரியல் இப்போ வரைக்கும் பேசப்படுது. இந்த சீரியல்ல வேலை செஞ்ச எல்லோரையும் சந்திக்க வெச்சா நல்லா இருக்கும்னு சீரியல் தயாரிப்பு நிர்வாகமும், விஜய் டிவி-யும் முடிவெடுத்திருக்காங்க. நான் வேலை செஞ்ச முதல் சீஸன்ல நடிச்ச எல்லோரையும் சந்திக்கலாம்னு ஆவலுடன் போனேன். பானுசந்தர் சார், ராகவி பொண்ணு உட்பட கொஞ்சம் பேர் வரல. அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்ட பலர்கூடவும் பேசினேன். தீபக்கும் நட்சத்திராவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாங்க. மரத்துக்குக் கீழ பசங்க நிற்குற மாதிரியான டிசைன்ல எல்லோருக்கும் ஷீல்டு கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரும் தங்களோட நினைவுகளைப் பகிர்ந்துகிட்டோம்.

நடிகை ரேகா

அந்த சீரியல்ல நடிச்ச பசங்க இப்போ ரொம்பவே வளர்ந்துட்டாங்க. அவங்கள்ல பலரும், இந்த சீரியலுக்கான ஆடிஷன்ல கலந்துகிட்டது, ஆக்டிங்கை கரியரா மாத்திகிட்டது, இப்போ வரை தொடரும் கரியர் சவால்கள்னு நிறைய விஷயங்களை நெகிழ்ச்சியா பகிர்ந்துகிட்டாங்க. இது பத்தி பேசிட்டு, ரமணா சாரைக் கட்டிப்பிடிச்ச இர்ஃபானோட கண்கள் கலங்குனதைக் கவனிச்சேன். `உன்னோட உணர்வுகளை நான் புரிஞ்சுகிட்டேன். பெரிய உயரத்துக்கு வளரணும்'னு அவர்கிட்ட சொன்னேன்.

சினிமாவுல சாதிக்கணும்ங்கிற கனவுகளுடன் இந்தப் பசங்க எதிர்கொள்ளும் சிரமங்களையெல்லாம் பார்த்தப்போ ரொம்பவே எமோஷனலா இருந்துச்சு. எதேச்சையா சினிமா வாய்ப்பு கிடைச்சு, பட வாய்ப்புகளுக்காக கஷ்டப்படாம வளர்ந்ததால, நாம கொடுத்து வெச்சிருக்கோம்ங்கிற உணர்வும் அப்போ எனக்குள் ஏற்பட்டுச்சு.

கனா காணும் காலங்கள் டீம்

எமோஷன்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும், எல்லாருமே ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாங்க. பல மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில, சாயந்திரம் சில மணி நேரம் மட்டுமே கலந்துகிட்டேன். சினிமா, சீரியல்ல எத்தனையோ புராஜெக்ட்ஸ்ல வேலை செஞ்சாலும், இது மாதிரியான பசுமையான நினைவுகளும் கொண்டாட்டமும் சில புராஜெக்டுகளுக்கே அமையும்" என்று புன்னகையுடன் முடித்தார்.



source https://cinema.vikatan.com/television/actress-rekha-speaks-about-kana-kaanum-kaalangal-serial-reunion-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக