Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

நாமக்கல்: பப்ஜி கேம் விளையாடிய மாணவர்! - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்

பரமத்திவேலூர் அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால், 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமத்தி வேலூர்

Also Read: கரூர்: பறிபோன ஆசிரியர் வேலை; அதிக மன உளைச்சல்! - பெற்ற தாயைக் கொலை செய்த பி.ஹெச்டி படித்த மகன்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பக்கத்தில் ஜேடர்பாளையம் அருகே உள்ள சிறுநல்லிகோயில், எல்லுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மகன் பிரதிஷ் (வயது:17). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார். பிரதிஷ் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் செய்வதற்காக அவரது பெற்றோர் ஆன்ட்ராய்டு மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளனர். இவர், வீட்டில் தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்ததாகவும், இதை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பிரதிஷ், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தோட்டத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். பின்னர், அவருக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர்களிடம் விஷமருந்து அருந்தியதை மறைத்து வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.

பிரதிஷ்

இதையடுத்து, அவரது பெற்றோர்கள் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் பிரதிஷை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில், பிரதிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார் மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பப்ஜி கேம் விளையாட வேண்டாம் என்று தனது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த் மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/namakkal-student-suicide-after-parents-scold-not-to-play-pubg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக