Ad

வியாழன், 3 ஜூன், 2021

ஊரடங்கை மீறி கொடைக்கானல் மலையில் ட்ரெக்கிங்! - சமூக வலைதள பதிவால் போலீஸில் சிக்கிய சம்பவம்

கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருப்பினும், சில இளைஞர்கள் தடை உத்தரவை மீறி பொய்க் காரணங்களை கூறி மலைப்பகுதிக்குள் நுழைந்து ட்ரெக்கிங் செல்கின்றனர். இடந்த சில தினங்களுக்கு முன்பு, கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான வடகவுஞ்சியில் இருந்து செம்பரான் குளம் வனப்பகுதி வழியாக சிலர் ட்ரெக்கிங் சென்றுள்ளனர்.

தடையை மீறி டிரக்கிங்

இதை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த அப்பகுதியினர், கொடைக்கானல் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர். இதையடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸார், பழனி, மதுரை, நெல்லை, சிவகங்கையைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். மலைப்பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்வதற்காக பயன்படுத்திய ஜீப் உள்ளிட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

“கொடைக்கானல் மலைப்பகுதியில் வனத்துறையினர் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடாததுதான் தடையை மீறி ட்ரெக்கிங் செல்வதற்கு காரணமாகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றிலும் 8 வனச்சரகங்கள் உள்ளன. ஆனால், இதில், 4 வனச்சரக அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். வனத்துறையில் காவலர்கள், அலுவலர்களின் பற்றாக்குறையும் ஒரு காரணமாக அமைகிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இது குறித்து போலீஸாரிடம் பேசினோம், ”மருத்துவ சிகிச்சை எடுத்தல், விவசாயப் பணிகளைக் கவனித்தல் என காரணங்களைச் சொல்லி சிலர் மலைப்பகுதிக்குள் நுழைந்துவிடுகின்றனர்.

டிரெக்கிங் செல்ல பயன்படுத்திய ஜீப்

பழனி டு கொடைக்கானல் சாலையில் தடையை மீறி ட்ரெக்கிங் செல்வதை தடுக்கும் வகையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், அதிரடி படையினர், சிறப்பு பிரிவு போலீசார் என 60 பேர் திண்டுக்கல், தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் சுழற்சி முறையில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வருவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/trekking-in-kodaikanal-hills-during-lock-down-police-action

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக