Ad

செவ்வாய், 8 ஜூன், 2021

அர்ஜுன் சம்பத்தை கலாய்க்க ட்விட்டரில் வந்த டைனோசர்கள்... #ஒன்றியஉயிரினங்கள் ட்ரெண்டின் பின்னணி என்ன?

கொரோனா லாக்டெளனால் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்குப் பெரும்பொழுதுபோக்கு சமூக வலைதளங்களே. அரசியல், சினிமா, விளையாட்டு என எந்த டாபிக்காக இருந்தாலும் அதன் அடிமட்ட ஆழம் வரை அலசி, ஆராய்ந்து, பிரித்துமேய்கிறார்கள் சமூக வலைதள ஆர்வலர்கள். அடிக்கடி கன்டென்ட் இல்லாமல் தவிக்கும்போது சிக்குவது யாராக இருந்தாலும் சிதைத்துவிடுவார்கள். அதில் லேட்டஸ்ட்டாக மாட்டியவர் அர்ஜுன் சம்பத்!

மீம்ஸ், தொடங்கி ஹேஷ்டாக் வரை நெட்டிசன்கள் எப்போது எதை ட்ரெண்ட் செய்வார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், ட்ரெண்ட் செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக செய்துவிடுவார்கள். இது நாள் வரை மனிதர்கள் மட்டுமே வசித்து வந்த ட்விட்டர் வெளியில் நமது பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய ‘ஜுராசிக் பார்க்’கிலிருந்த டைனோசர்களும், ‘தி லயன் கிங்’ சாம்ராஜ்யத்திலிருந்து சிங்கங்களும், ‘கிங்காங்’ கொரில்லாவும், ‘அனகோண்டா’ பாம்புகளும் டைம் பாஸ் செய்ய ட்விட்டரில் இணைந்துள்ளதாக பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டனர் ட்விட்டர் ப்ரியர்கள். அங்கே உயிரினங்கள் என்ன செய்தது?!

திமுக தொடர்ந்து ஒன்றிய அரசு என குறிப்பிட்டுவருவதால் ட்விட்டரில் இதுதொடர்பான வாக்குவாதம் திமுக - பாஜக அனுதாபிகளுக்கு இடையே நடந்துவந்தது. இதன் தொடர்ச்சியாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் கடந்த ஜூன் 4-ம் தேதியன்று இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க-வின் ‘ஒன்றிய அரசு’ கருத்தை விமர்சிக்கும் விதமாக கருத்து ஒன்றை பதிவிட்டார்.

#ஒன்றியஉயிரினங்கள்

முதலில் சைலன்ட்டாக இருந்த அப்பதிவு நெட்டிசன்களின் கண்களில் படவே, கன்டென்ட் கிடைத்த குஷியில் ஒவ்வொருவரும் மண்புழு முதல் மடகாஸ்கர் யானை வரை பலவகை உயிரினங்களாக உருமாறி #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக வைத்தனர். ட்ரெண்டிங்கில் மிருகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மிருகங்களின் பயோ தொடங்கி, டைனோசர் செய்த கொரோனா விழிப்புணர்வு வரை அனைத்தும் ரகளைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தன.

இதை அரசியல் தலைவர்கள் சிலரும் பின்பற்றி ட்வீட்டியதில் இன்னும் ஹிட் அடித்தது #ஒன்றியஉயிரினங்கள் ட்ரெண்ட். அவ்வாறு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா “தமிழ் பேசும் டார்டிகிரேட்” என்று ஆன்ட்- மேன் படத்தில் வரும் புகைப்படத்தை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

அதேபோல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் “வணக்கம் நண்பர்களே... செய்திகள் வாசிப்பது சிங்கக் கூட்டத்தின் தலைவர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாங்கள் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களில் நிலா என்ற எங்கள் தோழி உயிரிழந்து விட்டார். மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. என்ன செய்வதென தெரியவில்லை” என ட்வீட் செய்திருந்தார்.

இவற்றில் ஒரு சிலவற்றுக்கு அர்ஜுன் சம்பத் மீண்டும் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், போதும் போதும் என்கிற அளவிற்கு ஒரு ட்வீட்டை வைத்து சிறப்பான தரமான சம்பவங்களை செய்துவிட்டனர் நெட்டிசன்கள்!

ரகளைகளின் ஒரு சில சாம்பிள்கள் இங்கே!

#ஒன்றியஉயிரினங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்

இந்நிலையில், ஒன்றிய அரசின் சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருக்கிறார் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். “இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசாங்கத்தை ‘ஒன்றியம்’ என்றே அனைத்து இடங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது. அதனால், இவ்வாறு அழைப்பது விதிகளுக்கு உட்பட்டதுதான்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.



source https://www.vikatan.com/news/trending/interesting-trend-in-tamil-twitter-space

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக