Ad

புதன், 9 ஜூன், 2021

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 6,148 -ஆக அதிகரித்த மரணங்கள்! - காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 94,052 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,91,83,121 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6,148. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,59,676-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வாரம் சராசரியாக தினசரி மரணங்களின் எண்ணிக்கை 2,000-ல் பதிவாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6,148 பலி எண்ணிக்கை உயர்ந்ததுக்கு, பீகார் மாநிலம் தான் காரணம். பீகார் மாநிலத்தில் கொரோனா மரணங்களில் எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்து, அதுவும் கணக்கில் சேர்க்கப்பட்டதால் மரணக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,76,55,493 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 11,67,952 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,51,367 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/corona-death-increased-in-india-because-of-bihar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக