Ad

செவ்வாய், 12 ஜனவரி, 2021

"ஃபேஸ்புக்ல நம்ம போஸ்ட்டை நாமளே லைக் பண்ணலாமா?!" எல்லோரும் இன்புற்றிருக்க! #WednesdayWisdom

தோழி ஒருத்திக்கு பழக்கம் ஒன்றுண்டு. அவளது முகநூல் பக்கத்தில் ஒரு போஸ்ட் அல்லது போட்டோ போட்டாலும் அவளே அதை முதல் ஆளாக லைக்கும் செய்வாள். “நாம் போடும் போஸ்ட்டை நாமளே லைக் பண்ணனுமா?” எனக் கேட்டேன்.

அவள் சொன்ன பதில் என்னை யோசிக்கவைத்தது. நினைவு நாடாக்கள் என்ற ஹேஷ்டேக்கில் முகநூலில் தன்னுடைய பழைய போட்டோவையெலாம் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தாளாம். போட்டோவையும் அதற்கு ஏற்றாற்போல, "அந்த நேற்றுகளைக் கொண்டு வா" என ஒரு வரியையும் எழுதியவளிடம், உடன் அமர்ந்திருந்த அவளின் 10 வயது மகள் கேட்ட கேள்விகளே எனக்கான பதில்.

“அம்மா... இதுல போட்டோ போட்டா என்னவாகும்?”

“பார்க்கிற ஃப்ரெண்ட்ஸ் இது அவங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் போடுவாங்க... நல்லா இருக்குனு சிலர் கமென்ட்ஸ் எழுதுவாங்க... அவ்ளோதான்.”

“அம்மா... போஸ்ட் போட்டுட்டு அப்படியே வைக்கிற?”

“வேற என்ன பண்ணனும்?”

#WednesdayWisdom

“நீ ஏன் உன் போட்டோவை லைக் பண்ணல... உனக்கு இந்த போட்டோ பிடிக்காதா ?”

“எனக்கு ரொம்பவே பிடிச்ச போட்டோங்கிறதால தானே நான் இதை அப்லோட் பண்ணி போஸ்ட் போட்டேன்.''

“அப்போ ஏன் லைக் போடல?”

“நம்ம போட்டோக்கு நாமளே லைக் போடக் கூடாது.''

“அப்படின்னு யாரு சொன்னா ?”

“.............”

“நமக்குப் பிடிச்ச நம்ம போட்டோக்கு நாமதான ஃபர்ஸ்ட் லைக் போடணும்... வேற யாரும் லைக் பண்ணாட்டா அட்லீஸ்ட் நீ உன் போட்டோவை லைக் பண்ணியிருப்ப இல்ல?”

மேலோட்டாகப் பார்க்கும் பட்சத்தில் அவளின் கேள்வி சிறு பிள்ளைத்தனமெனத் தோன்றினாலும், அவள் சொன்ன விஷயத்தின் அடர்த்தி என்னை அசைத்துப் பார்த்தது. வாழ்க்கை ஓடுகிற போக்கில் நாம் மறந்துவிட்ட நிறைய விஷயங்களில் ஒன்று, நம்மை நமக்கே பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படை!

ஒரு போட்டோவோ அல்லது போஸ்ட்டோ போட்டுவிட்டு யாரேனும் லைக் செய்கிறார்களா, யார் லைக் செய்திருக்கிறார்கள் எனக் காத்து கிடக்கும். மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நமக்கு இது பிடிக்கும் என்கிற மனோபாவம் நம்மில் பலருக்கும் ஏன் இல்லாமல் போனது எனத் தெரியவில்லை.

Facebook

முகநூலின் ஓனர் மார்க்கோ அல்லது அந்நிறுவனத்தின் விதிமுறைகளோ நாம் பதிவேற்றுவதை நாமே விரும்பக் கூடாது எனச் சொல்லவில்லையே. பிறகும் ஏன் இத்தனை யோசனைகளும் தடுமாற்றங்களும்?

அன்றிலிருந்துதான் என் போஸ்ட்களைப் போட்டவுடன் அதை முதலில் லைக் செய்யும் ஆளாகவும் நானானேன் என்றாள்.

சரிதான்ல... நம்மை நாமே லைக் பண்ணுவோம் நண்பர்களே... நிச்சயம் லைஃப் நல்லாயிருக்கும்!



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/10-year-old-teaches-an-important-lesson-with-the-help-of-facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக