வீட்டில் நடந்த பஞ்சாயத்தில், `அபி வேலையை விட்டுவிட வேண்டும்; வீட்டிலேயே இருக்க வேண்டும்’ என்று கெளசல்யா தீர்ப்பு சொல்கிறார். `வேலைக்குப் போகக் கூடாது என்றால் எதற்காகப் படிக்க வைத்தீர்கள்’ என்று வீட்டாரிடம் கேட்கிறாள் அபி.
``இவ சரிப்பட மாட்டா. நீங்கதான் வேலையை விடச் சொல்றீங்க. அவ வாயிலிருந்து ஒரு வார்த்தை வர மாட்டேங்குது” என்று கெளசல்யா சொல்ல, அபியின் அப்பா, ``நாங்க சொல்வதை அபி மீற மாட்டா. இனி வேலைக்குப் போக மாட்டா” என்கிறார்.
``மாமாவும் அத்தையும் இவ்வளவு தூரம் சொல்லும்போது ஏத்துக்க சித்து. அபியும் நல்ல பொண்ணுதான்” என்கிறார் கெளசல்யா.
நிகழ்காலம்... சேதுராமன் போன் செய்து, `உன்னை அழைக்க சித்தார்த் வருகிறான்’ என்கிறார். காரில் பின் சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் அபி, சித்தார்த்தைக் கண்டுகொள்ளவில்லை. முன்பு ஒரு முறை அவள் பாடல் கேட்டதைக் குறை சொன்ன சித்தார்த், இப்போது அந்தப் பாடலைப் போடுகிறான். அப்போதும் அபி கண்டுகொள்ளவில்லை.
``தேங்க்ஸ் அபி. காரில் ஏற மாட்டேன்னு நினைச்சேன். உன்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருப்பேன். இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? நம்ம வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட நாள்” என்கிறான்.
மீண்டும் ஃப்ளாஷ் பேக்... அபி கொல்லைப்புறத்தில் சேதுராமனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அதை கெளசல்யாவும் அவர் கணவரும் ஒட்டுக் கேட்கிறார்கள்.
``உன் வேலைக்கு இப்படி உலை வச்சிட்டாங்களேன்னு வருத்தப்படுறியா அபி?”
``நான் வேற டென்ஷனில் இருக்கேன். அதைச் சொன்னா என்ன ஆகுமோ? பாண்டிச்சேரி போனப்ப ரூம் மேட்ஸ் யாரும் இல்ல. சில ரவுடிங்க கலாட்டா பண்ணினாங்க. அதனால கெளதம் ரூமில் வந்து துணைக்கு இருந்தார்” என்று அபி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அலறிக்கொண்டு வருகிறார் கெளசல்யா.
``ஒரே ரூம்ல ராத்திரி இருந்தீங்களா? என் தம்பி பாவம். நீ நல்லவன்னு நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சேனே... சித்து இங்க பாருடா” என்று அலப்பறையைத் தொடர்கிறார்.
விஷயத்தைக் கேட்ட சித்தார்த், ``இன்னும் என்னவெல்லாம் மறைச்சிருக்கே? அடுத்து ஒரே ஒரு தடவை தப்பு நடந்துருச்சுன்னு சொல்வியா?” என்று கேட்கிறான்.
``நான் உங்க கூட இவ்வளவு நாள் வாழ்ந்தும் நம்பிக்கை வரலையா?”
``வீடியோ பார்த்த பிறகு நம்பிக்கை போயிருச்சு.”
``எவனோ ஒருத்தனோட தங்கினவளோட என் தம்பி வாழ வேண்டாம். ஒரு பொண்ணுதான் ஓடிப் போனான்னு நினைச்சேன். குடும்பமே அப்படித்தான் இருக்கு” என்று கெளசல்யா சொல்ல, அபி உக்கிரமாகிறாள்.
``இனி ஒரு வார்த்தை சொன்னா என்ன செய்வேன்னு தெரியாது” என்று உக்கிரமாகிறாள் அபி.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-67
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக