Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

இரண்டாம் கட்ட ஒத்திகை; மத்திய அமைச்சர் ஆய்வு! - கொரோனா தடுப்பூசிக்கு தயாராகும் தமிழகம்! #NowAtVikatan

தயாராகும் தமிழகம்!

ஜனவரி 2-ம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஒத்திகை ஆனது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தின் கொரோனா தடுப்பூசி ஒத்திகையையும், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று பார்வையிட்டு வருகிறார். பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்யும் அமைச்சர் இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.



source https://www.vikatan.com/news/general-news/08-01-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக