கொரோனா தடுப்பூசி: மது அருந்தக் கூடாது!
புனேவிலிருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நேற்று தமிழகம் வந்தது. மத்திய தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்தக் கூடாது. இரண்டாம் டோஸ் போடும் வரையில் 28 நாள்களுக்கு மது அருந்திருக்க கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாள்களுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்து உருவாகும்” என்றார். மேலும் கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என்பதையும் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/general-news/13-01-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக