2021 ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18 அல்லது 19-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இப்போதைய சூழலில் 55 வீரர்கள் ஏலப்போட்டியில் இருக்கின்றனர். ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இதில் அடக்கம். பெங்களூரு அணி அதிகபட்சமாக 10 வீரர்களைத் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றியிருக்கிறது. ஐதராபாத் அணி மிகக்குறைவாக 5 வீரர்களை மட்டுமே வெளியேற்றி பெரும்பான்மையான வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது.
பஞ்சாப் அணிதான் அதிகபட்சமாகத் தங்கள் பர்ஸில் 53.2 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. அதனால் சென்னையில் பிரித்தி ஜிந்தாவின் கைகள் அடிக்கடி உயர்வதைக் காணலாம்.
சென்னை அணியில் தற்போது 18 வீரர்கள் இருக்கிறார்கள். 7 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர் ஒருவரை மட்டுமே எடுக்கமுடியும். சென்னை அணி ராபின் உத்தப்பாவை டிரேட் முறையில் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரியை சென்னை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://sports.vikatan.com/ipl/chennai-to-host-ipl-auctions-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக