Ad

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

விவசாயிகள் போராட்டம்: `பறவைக் காய்ச்சலைப் பரப்ப சிக்கன் பிரியாணி!’- சர்ச்சையில் பா.ஜ.க எம்.எல்.ஏ

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி எல்லையின் தேசிய நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படாததால், போராட்டமானது உச்சம் பெற்றுள்ளது.

விவசாயிகளின் இந்த வரலாறு காணாத போராட்டத்துக்கு, தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் தங்களின் ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். அதே சூழலில், இப்போராட்டம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பா.ஜ.க பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

முன்னதாக விவசாயிகளின் போராட்டத்தில் தீவிரவாத அமைப்பினர் உடுருவியுள்ளதாகவும், அதனால் விவசாயிகளின் போராட்டம் திசை திரும்பியுள்ளதாகவும் குற்றம்சாட்டி வந்தனர். தற்போது, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ-வான மதன் திலாவர் விவசாயிகள் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: `வேளாண் சட்டங்களை எதிர்ப்பதே சட்டவிரோதமா?' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்

இது தொடர்பாக பேசிய அவர், ``விவசாயிகள் என்ற பேரில் சிலர் போராட்டத்தில் ஊடுருவி நாட்டை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் வெறுமனே அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சூழலில் இது பறைவைக் காய்ச்சலை பெருமளவில் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

மதன் திலாவரின் கருத்து சர்ச்சையைக் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மத்திய அரசுடனான எட்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருந்த நிலையில் வரும் ஜனவரி 15-ம் தேதி அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/farmers-conspiring-to-spread-bird-flu-by-eating-chicken-biryani-alleges-bjp-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக