Ad

புதன், 13 ஜனவரி, 2021

பெண் குழந்தைகளைக் கொண்டாடும் தென் மாவட்ட சிறுவீட்டுப் பொங்கல்! (சிறப்பு படங்கள்)

சிறுவீட்டுப் பொங்கல்

பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதமாக சிறுவீட்டுப் பொங்கல் தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தை

பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மார்கழி மாதம் முழுவதும், அதிகாலையில் வீட்டு வாசலில் இடும் கோலத்தில், மாட்டு சாணத்தை உருட்டி அதில் பூசணி பூ,செம்பருத்தி பூவை கோலத்தின் நடுவில் வைப்பார்கள்.

சிறுவீட்டுப் பொங்கல்

தினமும் மாலை அந்த சாண உருண்டையை பூவுடன் எடுத்து எடுத்து எருவாகத் தட்டி வைப்பார்கள்.

நவதானியங்கள்

மார்கழி மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமையன்று நவதானியங்களை முளைகட்ட வைப்பார்கள்.

பெண் குழந்தை

தை மூன்றாம் நாள், அல்லது தைப்பூசம் அன்று களிமண்ணால் பொம்மை வீடு செய்வார்கள்

சிறுவீட்டுப் பொங்கல்

பெண் குழந்தையை அமர்த்தி அந்த வீட்டில் அடுப்பு வைத்து சிறிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவார்கள்.

சிறுவீட்டுப் பொங்கல்

புதிய களிமண் வீட்டில் பெண் குழந்தைகள் வெண்கல பானையில் சர்க்கரை பொங்கல் வைப்பார்கள்.

பெண் குழந்தை

ஒரு வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தட்டிய வறட்டி, முளைகட்டிய நவதானியங்களை வைத்து, ஒரே வீதியில் இருக்கும் சிறுமிகள் ஒன்றாகக்கூடி, தங்களின் பொங்கலை நடுவில் வைத்து கும்மி தட்டுவார்கள்.

சிறுவீட்டுப் பொங்கல்

கும்மி தட்டி முடித்ததும் அருகில் உள்ள குளம் அல்லது ஆற்றுக்குச் சென்று, வறட்டியை முதலில் தண்ணீரில் கரைத்து விடுவார்கள்.

சிறுவீட்டுப் பொங்கல்

பொங்கலுடன் இலையை தண்ணீரில்விட்டு கடவுளை வழிபடுவார்கள்.



source https://www.vikatan.com/ampstories/news/kids/siru-veetu-pongal-which-is-celebrated-across-southern-tamilnadu-special-album

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக