Ad

வியாழன், 14 ஜனவரி, 2021

இந்தியாவின் 300-வது வீரராக நடராஜன்... பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சுந்தருக்கும் வாய்ப்பு! #AUSvIND

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று காலை தொடங்கியது. இந்திய வீரர்கள் பலரும் காயமடைந்திருந்ததால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மயாங்க் அகர்வால், ஷர்துல் தாக்கூர் இருவரும் அணிக்குள் மீண்டும் வர தமிழக வீரர்கள் தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் இருவருமே அனைத்து ஃபார்மேட்டிலும் விளையாடக்கூடிய வீரர்களாக மாறியிருக்கிறார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக களமிறங்கும் 300-வது வீரராக வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் நடராஜன். வாஷிங்டன் சுந்தர் 301-வது வீரர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிரிஸ்பேன் மைதானத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் பல சாதனைகள் படைப்பார் என்றே எதிர்பார்க்கலாம். அதேப்போல் ஆல்ரவுண்டராக டெஸ்ட் அணியிலும் தனது முத்திரையைப் பதிக்க மிகப்பெரிய வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைத்திருக்கிறது.

Washington sundar, Jadeja, umesh Yadav

பிரிஸ்பேன் டெஸ்ட்டை இந்தியா வென்றால் தொடரைக் கைப்பற்றி சாதனைப்படைக்கும். ஆனால், கடந்த 28 ஆண்டுகளில் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவைத்தவிர எந்த அணியும் வென்றதில்லை. கடைசியாக 92-93 சீசனில் வெஸ்ட் இண்டீஸ் இங்கே வென்றதே சாதனை. மேலும், இந்தியா இதுவரை பிரிஸ்பேனில் வெற்றிபெற்றதேயில்லை.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இந்தியா வரலாற்றை மாற்றி எழுதுமா, அதற்கு நடராஜன் & வாஷிங்டன் சுந்தர் முக்கிய காரணமாய் அமைவார்களா?

காத்திருப்போம்!



source https://sports.vikatan.com/cricket/natarajan-debuts-for-india-in-tests-against-australia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக