சிட்னி டெஸ்ட்டின் கடைசி நாள் காலை... முதல் செஷனிலேயே இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் எனக் கணக்குப்போட்ட ஆஸ்திரேலிய பெளலர்களை அடித்து வெளுத்துக் கொண்டிருக்கிறார் ரிஷப் பன்ட்.
309 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் கேப்டனை குறிவைத்து அடித்தது ஆஸ்திரேலியா. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவர், நாதன் லயானின் முதல் ஓவரிலேயே இன்சைட் எட்ஜாகி ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹானே. 4 ரன்களில் வெளியேறினார் கேப்டன்.
அவ்வளவுதான் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கைகளில் போய்விட்டது என எதிர்பார்த்த தருணத்தில் உள்ளே வந்தவர் ரிஷப் பன்ட். ஹனுமா விஹாரி - புஜாரா கூட்டணியே ஐந்தாம் நாள் ஆட்டத்துக்கு சரியான சாய்ஸ் எனும்போது பன்ட்டின் வருகை விமர்சனங்களை கிளப்பியது. வந்ததுமே தன்னுடைய ஸ்டைலில் பன்ட் அதிரடி ஆட்டமும் ஆட ஆரம்பிக்க, ''டெஸ்ட் மேட்சை டெஸ்ட் மேட்சா ஆடேம்பா'' என்கிற முனுமுனுப்புகளை கமென்ட்ரி பாக்ஸில் கேட்க முடிந்தது. ஆனால், இன்றைய நாள் ரிஷப் பன்ட்டின் நாளாக இருந்தது.
நாதன் லயானின் ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரோடு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியவர், தொடர்ந்து லயானின் நம்பிக்கையை உடைத்துகொண்டேயிருந்தார். இதனால் வேறு வழியேயின்றி லயானை ஓரங்கட்டிவிட்டு லாபுசேனை பந்துவீசக் கொண்டுவந்தார் டிம் பெய்ன். லாபுசேனின் ஓவரிலும் விக்கெட் விழவில்லை என்றதும் மீண்டும் லயான் வந்தார். லயானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். 64 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டவரின் ஆட்டத்தில் இன்னமும் அனல் பறந்துகொண்டிருக்கிறது.
கடைசி நாளின் முதல் செஷனில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து, ஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல் அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. முதல் செஷனிலேயே 108 ரன்கள் குவித்துவிட்டதால், வெற்றிக்கான டார்கெட் 200 ரன்களுக்கும் கீழ் குறைந்துவிட்டது. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்திருக்கிறார்.
தற்போது பன்ட் 97 ரன்களில் லயானின் பந்தில் வெளியேறியிருக்கிறார். புஜாரா ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். புஜாரா 58 ரன்களுடன், விஹாரியோடு களத்தில் நிற்கிறார்.
இந்தியா வெற்றிபெற இன்னும் 157 ரன்கள் தேவை... ஆஸ்திரேலியா வெறியோடு பந்து வீசிக்கொண்டிருக்கிறது. காத்திருப்போம்!
source https://sports.vikatan.com/cricket/pant-fires-on-final-day-sydney-test-final-day-first-session-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக