``என்னடா வீணாவுக்கு முன்னாடி அப்படிப் பேசினானேனுதானே யோசிக்கிறீங்க... அவங்ககிட்ட அப்படித்தான் பேசியாகணும். நீங்க அதை எல்லாம் கண்டுக்காதீங்க. நீங்க எப்படி சர்வைவல் ஆகணும்கிறதை மட்டும்தான் பார்க்கணும். இங்கே சொன்ன நெகட்டிவ்களை எல்லாம் எப்படி பாசிட்டிவ்வாக மாற்ற முடியும்னு யோசிங்க” என்ற கெளதம், பென்னியை அழைத்து அபியைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறான்.
நம்பிக்கையோடு செல்கிறாள் அபி. “உங்க டிரஸ்ஸைப் பார்த்து வீணா ரொம்ப மட்டமா பேசிருப்பாங்களே... அவங்க அப்படித்தான். நம்ம டீம் ஹெட் கெளதம் ரொம்ப நல்ல டைப். நான் வந்தபோதுகூட வீணா இப்படித்தான் நடந்துகிட்டாங்க. ஆனா, கெளதம்தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தார். கவலைப்படாதீங்க” என்று ஃபிரெண்ட்லியாகப் பேசுகிறாள் பென்னி.
முதல் நாள் வேலை முடிந்து, மகிழ்ச்சியாக வீட்டுக்கு வருகிறாள் அபி. குழந்தைகள் இருவரும் கார்டனில் அமர்ந்திருக்கிறார்கள். வீடு பூட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். சித்தார்த்திடம், `உங்களை நம்பித்தானே போனேன்' என்கிறாள் அபி. அவனோ, `எனக்கு வேலை வந்துவிட்டது' என்கிறான்.
குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது போன் செய்த சித்தார்த் மகளிடம், ``சாரிம்மா. அப்பாவுக்கு அவசர வேலை வந்துருச்சு. ரொம்ப நேரம் வெளியில் இருந்தீங்களா? பொம்பளைங்க எல்லாம் அவங்க வேலையைப் பார்க்கலைன்னா இப்படித்தான் பிரச்னை வரும்” என்று சொல்லிவிட்டு, போனை வைக்கிறான்.
வேலை கிடைக்காது என்ற தைரியத்தில் வேலைக்குப் போகச் சொல்லிவிட்டான் சித்தார்த். அவன் நினைத்ததுபோல நடக்காமல் அபிக்கு வேலை கிடைத்துவிட்டது. அதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
இரவில் சித்தார்த்திடம் தன்னுடை முதல் நாள் ஆபீஸ் அனுபவங்களை ஷேர் செய்துகொள்வதற்காக ஆர்வத்துடன் வருகிறாள் அபி. “என் ஆபீஸ் அனுபவம் பத்தி ஒண்ணுமே கேட்கலையே” என்கிறாள்.
“இங்கே பாரு, எனக்கு வேலை இல்லைன்னுதானே நீ ஆபீஸ் போறே... இவ்வளவு நாள் நான் ஆபீஸ் போயிட்டிருந்தேனே, ஒரு நாளாவது அதைப் பத்தி சொல்லிருக்கேனா. உன்கிட்ட மட்டும் அதைக் கேட்கணும்னு எப்படி எதிர்பார்க்குறே, முதல் நாள்லயே சொல்ல என்ன இருக்கும்? அப்படி என்ன சாதிச்சிட்டே. நானும் இந்த ஃபீல்டில் குப்பைக் கொட்டினவன்தான். நீ என்ன புடுங்கறேன்னு நானும் பார்க்கறேன். ஆல் தி பெஸ்ட். உன்னோட வேலை எல்லாம் டெம்ப்ரவரி. இதுக்காக என் கரியரை சாக்ரிஃபைஸ் பண்ணிக்கிட்டு உன்னோட இருப்பேன்னு மட்டும் நினைக்காதே” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டுச் செல்கிறான் சித்தார்த்.
கலக்கத்தில் இருக்கிறாள் அபி.
இனி என்ன நடக்கும்?
திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக