ஹர்ஷிதாவிடம் ஆபீஸ் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அபி, வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி சொல்கிறாள். `உனக்குத் திறமை இருக்கிறது, நீ பெரிய பொறுப்புக்கு வருவாய்' என்கிறாள் ஹர்ஷிதா. கெளதம் டீமில் அபி இருப்பதாகச் சொன்னவுடன், ஹர்ஷிதா அவன் புகழ்பாட ஆரம்பித்துவிடுகிறாள்.
``என் திறமை மேல எனக்கு இல்லாத நம்பிக்கை உங்களுக்கு இருந்திருக்கு. உங்களாலதான் என்னாலும் ஏதாவது செய்ய முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்கிறாள் அபி.
``குடும்பத்தை மட்டும் பார்த்துக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, இந்த வாழ்க்கையில் நம்ம திறமையை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாமல் போயிடும். நம்ம திறமையை வெளிப்படுத்தும்போதுதான் மற்றவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே நம் மீது மதிப்பு வரும்” என்று ஹர்ஷிதா சொல்வது சரியானதுதான்.
பெண்களின் கரியருக்கு இடையில் திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு என்று பல விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் மீறி அவர்கள் கரியரில் ஷைன் பண்ணுவது பெரிய விஷயம்தான். அதிலும் படித்தவுடன் கல்யாணம், குழந்தை என்று ஆறு ஆண்டுகள் இருந்துவிட்டு, அனுபவம் இல்லாமல் வேலைக்குச் செல்லும்போது, அபி அதிக நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
`புரொபோசல் சரியில்லை’ என்று மீட்டிங்கில் அபி மீது எரிந்துவிழுகிறார் வீணா. அபியின் நம்பிக்கை உடைந்து போகிறது. `ஒரு மெயில்கூட எழுதத் தெரியவில்லை, ஒழுங்காக டிரஸ் செய்துகொள்ளத் தெரியவில்லை’ என்று வீணா அடுக்கிக்கொண்டே போகிறார். உடனடியாக இந்த வேலையை முடித்துக்கொடுக்கச் சொல்கிறார். பெனிடா, லோகேஷ், காயத்ரி எல்லாம் அபிக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
இதைச் சரியாகச் செய்யாவிட்டால், அபியை ஓரம் கட்டிவிடுவார் என்று பயமுறுத்துகிறார்கள். எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிவிடுகிறார்கள். அபிக்கு உதவி செய்ய யாரும் இல்லை.
என்ன செய்வதென்று அபி யோசித்துக்கொண்டிருக்கும்போது, கெளதம் வருகிறான். விஷயத்தைக் கேள்விப்பட்டு உதவுவதாகச் சொல்கிறான். வீட்டுக்குத் தகவல் சொல்லிவிட்டு, வேலையை முடித்துவிட்டுக் கிளம்புவதாகச் சொல்கிறாள் அபி.
தாமதமாக வீட்டுக்குப் போனால், அங்கே என்ன காத்திருக்குமோ?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-37
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக