தெலங்கானாவின் சட்டமன்ற மேலவை தேர்தலுக்குப் பதிவு செய்திருந்த வாக்காளர்களின் போன் நம்பர், இ-மெயில் ஐடி போன்ற தகவல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கசிந்துள்ளதாக அம்மாநிலத்தின் தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எப்படி நடந்தது என உடனடியாக விசாரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த வல்லுநர்கள்.
ஸ்ரீனிவாஸ் கோடலி, தகவல் பாதுகாப்பு நிபுணரான இவர் @digitaldutta என்ற பெயரால் பலராலும் அறியப்படுபவர். தொடர்ந்து தனிநபர் பிரைவசி சார்ந்த பல பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்துவருகிறார். இவர் ஹைதராபாத் தொகுதியில் தெலுங்கானாவின் மேலவை தேர்தலுக்கு வாக்களிப்பதற்காகத் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்திருக்கிறார். பதிவுசெய்ததும் பா.ஜ.க தரப்பிலிருந்து அவர் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. இது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பினார் அவர். அதைத் தொடர்ந்து வாக்காளர்கள் பலரும் தங்களுக்கும் இப்படியான எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர். இது பெரும் சர்ச்சையாக அங்கு உருவெடுத்திருக்கிறது.
வாக்காளர்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்
“I am delighted to inform you that you have been enrolled as a voter in MBNR-RR-Hyd graduates MLC constituency. Looking forward for your support and blessings to give me another opportunity to work for better society. - N Ramchanddar Rao MLC"
"எனது தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாஜகவிற்கு எப்படிக் கிடைத்தது? எதோ ஒரு வழியில் வாக்காளர்களின் போன் நம்பரை அந்த கட்சியினர் பெற்றிருக்கின்றனர். இது தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பிலிருந்துதான் கசிந்ததா இல்லை வேறு வழிகளில் இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை" என்ற ஸ்ரீனிவாஸ் கோடலி, ஒரு வாக்காளனின் பிரைவசியை பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. எப்படி பா.ஜ.க இந்தத் தகவல்களைப் பெற்றது எனத் தேர்தல் ஆணையம். விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இவருடன் மற்றும் பல தகவல் பாதுகாப்பு வல்லுநர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் வாக்காளர்களின் தகவல்களை தகுந்த பாதுகாப்புடன் கையாள்கிறதா தேர்தல் ஆணையம் என்ற சந்தேகத்தை பலருக்கும் எழுப்பியிருக்கிறது. பலரும் CERTIn மற்றும் தேர்தல் ஆணையத்தை டேக் செய்து இது குறித்து விளக்கம் கேட்டுவருகின்றனர்.
இது குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் தெலங்கானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி சஷாங்க் கோயல்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/voters-phone-number-and-other-details-leaked-to-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக