Ad

சனி, 26 டிசம்பர், 2020

`ஹெச்.ராஜாவை அமைச்சராக அமரவைப்போம்!’ - காரைக்குடியில் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துவருகிறது. அ.தி.மு.க., தி.மு.க என அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கின்றன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பா.ஜ.க தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழாவில், அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

அண்ணாமலை - எல்.முருகன்

அவர் பேசுகையில்,``வேளாண் சட்டங்களில் மத்திய அரசு சிறிய மாற்றத்தைக் கொண்டுவர முன்வராது. 70 ஆண்டுகளாக விவசாயிகளைக் கூன்போட்டு நிற்கவைத்தது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான். ஆனால் பா.ஜ.க அப்படி இல்லை. அரசியலில் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் பேசிவரும் ஸ்டாலின் தலைவராக இருக்கும் தி.மு.க., வரும் தேர்தலில் காணாமல் போகும். 2021 தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்கி, தமிழக அமைச்சராக அமரவைப்போம்.

Also Read: `கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2,000 ரூபாயாகக் கொடுப்பர்' - தமிழக அரசியலைச் சாடும் அண்ணாமலை

சிவகங்கையில் ஹெச்.ராஜா போன்ற தலைவர்கள் தி.மு.க சக்தியை வேரறுத்து, படிப்படியாக உடைத்து 10,000, 15,000 பேரை பா.ஜ.க-வில் இணைத்திருக்கிறார்கள். இது சாதாரண விஷயம் அல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துக்காட்டாக சிவகங்கை பா.ஜ.க-வினர் இருக்கிறார்கள்.

காரைக்குடியில் அண்ணாமலை

என்னுடைய பகுதியில் நான் வேலை செய்ய ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார்கள். அதனால், அண்ணன் ராஜா சொன்னதால் இங்கு ஓடி வந்திருக்கிறேன். எனவே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நாண்கு தொகுதிகளில் பா.ஜ.க கைகாட்டும் நபரை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள். மாநிலத் தலைவர் எல்.முருகன் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு குறித்து கூறிய கருத்து, திரித்துக் கூறப்பட்டது. அது குறித்து எங்கள் தேசியத் தலைமை முறையாக அறிவிக்கும். அதைத்தான் முருகனும் கூறினார்” என்றார்

கூட்டத்தில் பேசிய பா.ஜ.க முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா,``பிரதமர் மோடி வழிகாட்டுதல் ஆட்சி தமிழகத்துக்குத் தேவை. 2ஜி வழக்கில் வரும் 31-தேதி தீர்ப்பு வரும். அப்போது நீலகிரி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நிச்சயம் வரும்’’ என்றார் .



source https://www.vikatan.com/government-and-politics/politics/h-raja-will-be-tn-minister-after-2021-election-says-bjp-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக