Ad

புதன், 2 டிசம்பர், 2020

கோவை: தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து - சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி!

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை தடத்தில் ஏராளமான பேருந்துகள் செல்லும். இந்தநிலையில், நேற்று ஒரு தனியார் பேருந்து (நம்பர் 3), அப்போதுதான் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. தற்போது உக்கடம் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடந்துவருகின்றன.

தனியார் பேருந்து

Also Read: கடலூர்: நெய்வேலி என்.எல்.சி-யில் மீண்டும் விபத்து! - படுகாயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

சமீபத்தில்தான், அந்த வழித்தடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை அதிகவேகமாக ஓட்டியிருக்கிறார். சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைக் கடந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து, முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் மீது பேருந்து மோதியது. வாகனங்களை இடித்துத் தள்ளிய நிலையிலேயே, தடுமாறி அருகே இருந்த பெட்ரோல் பங்குக்குள் பேருந்து நுழைந்து நின்றது. இதில், பேருந்தின் முன்னால் சென்ற இருசக்கர வாகனம், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, தரையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது.

தனியார் பேருந்து

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

Also Read: மும்பையைப் பதறவைத்த தீ விபத்து! - அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,500 பேர்

காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த உக்கடம் போலீஸார், பேருந்து ஓட்டுநர் ரமேஷைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். பலியான ராஜமாணிக்கம் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தனியார் பேருந்து

இது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில், `இதுபோல அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோவை மக்கள் கோரிக்கைவைத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/accident/man-died-2-injured-in-coimbatore-bus-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக