Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

`பொங்கிவரும் புதுவெள்ளத்துக்கு சிறுமடைகள் தடைகள் ஆகாது!’ - மதுரையில் கமல்

சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் நான்கு நாள் பிரசாரப் பயணத்தை மதுரையிலிருந்து இன்று தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கமல் ஹாசன்

அவரை வரவேற்க தென்மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். மதியம் வருகைதந்த கமல்ஹாசன் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்,``இரண்டரை வருடங்களுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் பிரசாரப் பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இங்கு தொடங்குகிறோம். கடைசி நேரத்தில் சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், பொங்கி வரும் புதுவெள்ளத்துக்கு முன்னாள் சிறு மடைகள் தடைகள் ஆகாது. சட்டத்துக்கு உட்பட்டு எப்படி திட்டமிட்டிருக்கிறோமோ, அதன்படியே எங்கள் பிரசாரப் பயணம் இருக்கும்.

கமல்ஹாசன்

அரசியலுக்கு வருவதற்கு முன்பே தடை வைப்பார்கள். எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. எங்களுக்குப் பதற்றமில்லை. மக்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கு உள்ளது'' என்றவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

''மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளதா?'' என்ற கேள்விக்கு, ``எதுவும் நடக்கலாம் . தற்போது அது பற்றி கூற இயலாது'' என்று பதிலளித்தார்.

கமல் ஹாசன்

''மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றுசேர்ந்து தேர்தலைச் சந்திக்குமா?'' என்ற கேள்விக்கு, ``இருக்கும் அணிகள் பிளவுபடலாம், புதிய அணிகள் உருவாகலாம். தற்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.

''மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா?'' என்ற கேள்விக்கு ''அனைத்தும் சாத்தியமே, அமைய வாய்ப்புள்ளது'' என்றார்.

கமல் ஹாசன்

''கடந்த தேர்தலின்போது தங்களுடைய கருத்தால் பிரசாரப் பயணம் தடைப்பட்டது, அதுபோல் இந்த பயணத்திலும் இடையூறு வருமா?'' என்ற கேள்விக்கு, ``யாருக்கு என் கருத்து குத்தலாக இருக்குமோ, அவர்கள் தடை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஆனால், அதையும் மீறி சட்டத்துக்கு உட்பட்டு பயணம் தொடரும்'' என்றவர், ''இப்போதைக்கு இது போதும் மற்றவைகளை பிரசாரத்தில் தெரிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு கிளம்பினார்.

Also Read: மதுரையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல்! #TNElections2021

இன்று இரவு வரை மதுரையில் நான்கு இடங்களில் பிரசாரப் பயணம் நடைபெறுகிறது. அரங்கக் கூட்டத்திலும் பேசுகிறார். நாளைய தினம் மதுரை நிகழ்சிகளை முடித்துவிட்டு அடுத்தடுத்த மாவட்டங்களுக்குக் கமல்ஹாசன் செல்கிறார்.

கமல்ஹாசன்

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியது பற்றி கமல் கேள்வி எழுப்பி ட்வீட் செய்தது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/kamal-haasan-starts-mnm-election-campaign-from-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக