Ad

வெள்ளி, 4 டிசம்பர், 2020

ரஜினியும் அரசியல் `பஞ்ச்'களும்!

1992 - ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்.''

1992 - ``எம்பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்"

1995 - ``நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..."

1996 - ``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது"

2017 - ``நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது. சிஸ்டம் கெட்டுப்போச்சு. போர் வரும்போது பாத்துப்போம்''

2017 - ``நான் தமிழனானு கேட்குறாங்க... நீங்க என்ன தமிழனாவே மாத்திட்டீங்க... எங்க மூதாதையர், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரில பொறந்தவங்கதான்... அதுனால நான் பச்ச தமிழன்"

2017 - ``இது காலத்தின் கட்டாயம்... வரப்போர சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்''

2018 - ``கட்சி ஆரம்பிப்பது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்"

2019 - ``சிஸ்டம் சரி செய்யாம அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரைப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும்.''

2019 - ``கட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால், அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார்.''

2020 - ``எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால் கொரோனா காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டாமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன்.''

2020 - ``அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். அது காலத்தின் தேவை. அது இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்ல. எல்லாத்தையும் மாத்தணும். தமிழகத்தின் தலையெழுத்தை மாத்த போற நாள் வந்தாச்சு!’'



source https://www.vikatan.com/ampstories/news/politics/rajini-and-his-punch-dialogues-related-to-politics-1992-to-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக