Ad

சனி, 12 டிசம்பர், 2020

உங்க காரைக் காதலிக்கிறீங்களா? உங்களுக்கான வொர்க்ஷாப் இது!

நடராஜன் என்பவர், 60‘ஸ் கிட்ஸ். காலை எழுந்தவுடன் மிகச் சரியாக காலைக் கடனை முடித்து, இந்த 60 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு இது வரை உணவு செமித்தல் தொடர்பாக ஒரு பிரச்னைகூட வந்ததில்லையாம். இத்தனைக்கும் யோகா, உடற்பயிற்சி என இதற்கெனவெல்லாம் மெனக்கெட்டதில்லை. வேறொன்றுமில்லை; அவர் செய்வதெல்லாம் இதுதான். உணவு உண்ணும்போது ஒவ்வொரு தடவையும்18 தடவைக்கு மேல் நன்றாக மென்று உண்ணும் பழக்கம் கொண்டவராம் நடராஜன். சிறு வயதில் தொடங்கிய பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. அதாவது, அவருக்கே தெரியாமல் செய்யும் ஒரு சின்ன விஷயம் – அவருக்கு வாழ்நாள் வரை கைகொடுக்கிறது.

என்னடா, இது ஹெல்த் தொடர்பான அறிவுரைக் கட்டுரையா என்று ஒதுங்கி விடாதீர்கள். இது ஆட்டோமொபைலுக்கும் பொருந்தும்.

ஹூண்டாய் கார் சர்வீஸ்

மோட்டார் விகடன் வாசகர் ஒருவர், பழைய ஹோண்டா சிட்டி காரின் உரிமையாளர். அவருக்கு இது வரை இன்ஜினில், ஏசி–யில், ஹெட்லைட்டில், பேட்டரியில் (வாரன்ட்டி முடிந்த பிறகும்) என எதிலும் ஒரு பிரச்னைகூட வந்ததில்லை என்கிறார். காரணம், காரை ஸ்டார்ட் செய்துவிட்டு 3 நிமிடம் ஐடிலிங்கில் விட்டுத்தான் காரை எடுப்பாராம். அதேபோல், இன்ஜினை ஐடிலிங்கில் விட்ட பிறகுதான் ஹெட்லைட், ஏசி–யை ஆன் செய்வது, இன்ஜினை ஆஃப் செய்வதற்கு முன்பே மற்றவற்றை ஆஃப் செய்வது என சின்ன பெர்ஃபெக்ஷனோடுதான் எல்லாவற்றையும் செய்வார். கார் வாங்கிய நாளிலிருந்து இந்த விஷயங்களை இப்போது வரை கடைப்பிடிக்கிறார் அவர். இதனால், பெட்ரோல் மிக்ஸிங், டர்போ சார்ஜர் வேலை, எலெக்ட்ரிக்கல் பாகங்கள் என்று எல்லாமே பக்காவாக வேலை செய்யும். அதாவது, சில நல்ல விஷயங்களுக்கு நாள்பட்ட நன்மைகள் உண்டு என்பதுதான் இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இதுபோல், மெனக்கெடாமல் செய்யும் சில விஷயங்களை நாம் மெனக்கெட்டுப் பழக்கப்படுத்திக் கொண்டால், நமது வாகனங்களுக்கு லைஃப் லாங் ஆரோக்கியம் கேரன்ட்டி. மைலேஜில் ஆரம்பித்து, பராமரிப்பு, மழைக் காலங்களில் பாதுகாப்பான டிரைவிங், ரீ–சேல் என பல விஷயங்களுக்கு இப்படி சில விஷயங்கள் உண்டு.

அதைச் சொல்வதற்குத்தான் மோட்டார் விகடன் இந்த மாதம் 20–ம் தேதி ஒரு வொர்க்ஷாப் நடத்த இருக்கிறது. இதற்கான டிப்ஸ்களை வழங்க இருப்பவர் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் சர்வீஸ் துணைத் தலைவர் புன்னைவனம் சங்கரமூர்த்தி. நாடு முழுதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் சர்வீஸ் மையங்களை நிர்வகிக்கும் பெரிய பொறுப்பில் இருப்பவர் புன்னைவனம். ஹூண்டாய் மட்டுமல்ல; மாருதி, ஃபியட் போன்ற கம்பெனிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அனுபவத்தைச் சேகரித்தவர்.

‘‘இது கார்களுக்கான வொர்க்ஷாப் இல்லை; கார் ஓனர்களுக்கான வொர்க்ஷாப்’’ என்று இதற்கு டேக்லைன் கொடுக்கிறார் புன்னைவனம் சங்கரமூர்த்தி. நிஜம்தான். காரைக் காதலிப்பவர்களான வொர்க்ஷாப்தான் இது.

சாம்பிளுக்கு சில டிப்ஸ்:

டிப்ஸ்
  • சிலருக்கு க்ளட்ச் என்றால் ரொம்பப் பிடிக்கும். டிராஃபிக்கில், சிக்னலில் நிற்கும்போது என கியரில் இருந்தபடி எப்போதுமே க்ளட்ச்சில் கால் வைத்தபடியே இருப்பார்கள். இதனால், 25 சதவிகிதம் மைலேஜ் அடிவாங்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல், கியர் போடும்போது எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக க்ளட்ச் மிதிக்கிறீர்களோ… அவ்வளவுக்கவ்வளவு கியர்பாக்ஸ் ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • ஹில் ஸ்டேஷனில் காரில் பயணிக்கிறீர்கள். இறங்கும்போது சிலர் எரிபொருளை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று நியூட்ரலிலோ, இன்ஜினை ஆஃப் செய்துவிட்டோ இறங்குவார்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? நியூட்ரலில் பிரேக்குகள் 65 சதவிகிதம்தான் வேலை செய்யும். கூடவே, ஸ்டீயரிங் கன்ட்ரோலும் கிடைக்காது.

  • மலையில் இறங்கும்போது பிரேக்கில் கால் வைத்துக் கொண்டே பயணித்தால், பிரேக் டிரம்கள் சூடாகிவிடும். பிரேக் வேலை செய்யாது. உதாரணத்துக்கு, நிறைய கொண்டை ஊசிகள் கொண்ட ஒரு மலைச்சாலையில் இறங்குகிறீர்கள். பாதி வளைவுகளுக்குப் பிறகு திடீரென கார் பிரேக் பிடிக்காமல் போனால், பதற்றப்பட்டு சர்வீஸ் சென்டருக்கு போன் செய்யத் தேவையில்லை. பாதுகாப்பான கொண்டை ஊசி வளைவில் காரை பார்க் செய்துவிட்டு, ரிலாக்ஸாக ஒரு டீ அடித்துவிட்டு, காரைக் கிளப்புங்கள். நீங்கள் மலை இறங்கும்போது பிரேக்கில் கால் வைத்துக் கொண்டே இறங்கியிருந்தால், பிரேக் பேடுகள் சூடாகி இருக்கும். நீங்களும் பிரேக் பேடுகளும் கொஞ்சம் கூல் ஆன பிறகு வண்டியை எடுங்கள். பிரச்னை இருக்காது.

  • சிலர் சின்ன காருக்குக்கூட பம்பருக்கு முன்பு இரும்பில் க்ராஷ் கார்டு (Crash Guard) போட்டு அழகு பார்ப்பார்கள். இயானைக்கூட இனோவாவாக மாற்றிவிட்டு பெருமை கொள்வார்கள். காருக்கு க்ராஷ் கார்டு என்பது இந்தியாவில் மட்டும்தான். (நாம் கண்டுபிடித்த உருப்படியான விஷயம் – Saree Guard வேண்டுமானால் சொல்லலாம்.) கார்களுக்கு Crash Guard என்பது தேவையில்லாத விஷயம். கார் தயாரிப்பு நிறுவனங்களே இதை ரெக்கமண்ட் செய்வதில்லை. காரணம் – பம்பரின் தன்மையையே இது காலி செய்யும். இந்த எடை முழுதும் சேஸியில் உட்கார்வதால் காரின் டைனமிக்ஸ், டிரைவிங், ஹேண்ட்லிங், மைலேஜ் என எல்லாமே பாதிக்கும். கார் எதிலாவது மோதும்போது, நேராக ஆட்களைத்தான் இது பாதிக்கும். காற்றுப்பைகளும் வேலை செய்யாமல் போகும் அபாயம் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

  • காரைத் தனியாரில் சர்வீஸில் விட்டாலும் சரி; கம்பெனியில் விட்டாலும் சரி – சர்வீஸ் ஹிஸ்டரியைச் சரியாக மெயின்டெயின் செய்யுங்கள். நீங்கள் காரை விற்கும்போது, வாங்குபவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். ரீ–சேல் மதிப்பு நிச்சயம் ஏறும்.

Online Workshop

இதெல்லாம் சாம்பிள்தான். இதுவரை ஆயிரக்கணக்கான கார்களை சர்வீஸ் செய்த புன்னைவனம் சங்கரமூர்த்தி, இதுபோல் ஏகப்பட்ட டிப்ஸ்களை இந்த வொர்க்ஷாப்பில் தர இருக்கிறார்.

இப்போ சொல்லுங்க… இது கார் ஓனர்களுக்கான வொர்க்ஷாப்தானே!

Date: டிசம்பர் 20, 2020

Time: மாலை 04.00 - 06.00

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்: https://bit.ly/39wCnKL

Speaker: புன்னைவனம் சங்கரமூர்த்தி, துணைத் தலைவர் (சர்வீஸ்), ஹூண்டாய் மோட்டார் இந்தியா.

நாடு முழுதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் சர்வீஸ் மையங்களை நிர்வகிக்கும் பெரிய பொறுப்பில் இருப்பவர் புன்னைவனம். ஹூண்டாய் மட்டுமல்ல; மாருதி, ஃபியட் போன்ற கம்பெனிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அனுபவத்தைச் சேகரித்தவர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 360 டிகிரி டிஜிட்டல் சர்வீஸ், கொரோனா காலத்திற்கு ஏற்ப contactless service... ஆகியவற்றையும் நடைமுறைக்கு கொண்டு வந்தவர்.



source https://www.vikatan.com/automobile/motor/car-maintenance-and-service-tips-by-hyundai-online-workshop-by-motor-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக