Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`97 பக்க புகார் பட்டியல்; விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ - ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் #NowAtVikatan

`97 பக்க புகார் பட்டியல்’ -ஆளுநரிடம் வழங்கிய ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. பெரும்பான்மையான கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அப்போது அவர், தமிழக ஆளுநரிடம், தமிழக அரசு மீதான முறைகேடு பட்டியலை வழங்கினார். ஆளுநருடனான் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ``தமிழக அரசின் அனைத்து துறகளிலும் ஊழல் நிலவுகிறது. நாங்கள் அளித்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆளுநருடன் மனுவாக வழங்கினோம். 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்” என்றார். இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/22-12-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக