"ரொம்ப நாளா வெயிட் பண்றோம். ஒரு சின்ன அப்டேட் கூட தரகூடாதா?"... நம்ம தல ரசிகர்கள் மட்டுமல்ல மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் ரசிகர்களின் மைண்ட்வாய்ஸும் இதுவாகத்தான் இருந்து வருகிறது.
எதிர்தரப்பு DC காமிக்ஸ் 'வொண்டர்வுமன் 1984', 'ஜஸ்டிஸ் லீக்: ஸ்னைடர் கட்', 'தி சூசைட் ஸ்குவாட்', 'தி பேட்மேன்', 'பிளாக் ஆடம்' என ரிலீஸுக்குத் தேதி குறித்துகொண்டிருக்க பல மாதங்களாக அமைதி காத்துவருகிறது மார்வெல். கடைசியாக ஜூலை 2019 வெளியானது 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்'. கடந்த மார்ச் மாதம் வெளிவந்திருக்க வேண்டிய 'பிளாக் விடோ' கொரோனாவால் தள்ளிப்போனது. ரசிகர்களின் பல மாத காத்திருப்பை புரிந்துகொண்டு மொத்தமாக அப்டேட்களை அள்ளிப்போட்டு எடுத்துவந்திருக்கிறது டிஸ்னி. வருடாந்திர முதலீட்டாளர்கள் சந்திப்பில் ('2020 Investor Day') அடுத்த சில வருடங்களுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறோம் எனப் பட்டியலிட்டிருக்கிறது. இதில் டிஸ்னிக்கு சொந்தமான மார்வெல் ஸ்டூடியோஸ் மட்டுமல்லாமல் பிக்ஸார், லூகாஸ்பிலிம் போன்ற மற்ற தயாரிப்புகளின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் டிரெய்லர்களை வெளியிட்டுள்ளது டிஸ்னி. அப்படி இந்த நிகழ்வின் முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
டிஸ்னி+ தொடர்கள்
கடந்த ஆண்டுதான் டிஸ்னி+ சேவை மூலம் ஸ்ட்ரீமிங் சந்தையில் களமிறங்கியது டிஸ்னி. அப்போதே பிரபல மார்வெல் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு தொடர்கள் பலவும் டிஸ்னி+ தளத்தில் வெளியாகும் என தெரிவித்திருந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட தொடர்களின் டிரெய்லர்களை இப்போது வெளியிட்டிருக்கிறது டிஸ்னி. இது இல்லாமல் இன்னும் சில புதிய தொடர்களையும் அறிவித்திருக்கிறது.
டிஸ்னி+ல் வெளியாகும் முதல் தொடராக 'WandaVision' இருக்கும். ஸ்கார்லெட் விட்ச் மற்றும் விஷன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடர் வரும் ஜனவரி 15 வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய டிரெய்லர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கேப்டன் அமெரிக்காவின் நண்பர்களான ஃபால்கன் மற்றும் வின்டர் சோல்ச்சர் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் 'The Falcon and the Winter Solider ' தொடரின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. இது மார்ச் மாதம் வெளிவரவிருக்கிறது.
அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தின் வில்லனும் தோர் கதாபாத்திரத்தின் சகோதரனுமான லோக்கி கதாபாத்திரத்தை மையமாக கொண்ட 'Loki' குறுந்தொடரின் டீஸரும் வெளியானது. இந்தத் தொடர் அடுத்த மே மாதம் டிஸ்னி+-ல் வெளிவரும்.
முதல் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திலிருந்து மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இருக்கும் பிரபல சூப்பர்ஹீரோ ஹாக்ஐ கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் தொடர் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி நடந்திருந்தால் என்னவாகிருக்கும் என்று மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் கதாபாத்திரங்களை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் அனிமேஷன் தொடர் 'What If'. மார்வெல் படங்களில் நடித்த அதே நடிகர்கள் பின்னணி குரல் கொடுக்கும் இந்த தொடரின் டீஸரும் வெளியிடப்பட்டது.
இது இல்லாமல் டிஸ்னி+ தளத்திற்கு வரும் மூன்று புதிய மார்வெல் தொடர்கள் பற்றியும் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. Ironheart, Armor Wars மற்றும் Secret Wars என இவை பெயரிடப்பட்டுள்ளன. Ironheart ரிரி வில்லியம்ஸ் என்ற புதிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்யும். இதில் 'If Beale Street Could Talk' படத்தில் நடித்த டாமினிக் த்ரோன் நடிக்கவுள்ளார். Armor Wars தொடரில் அயர்ன் மேன் டோனி ஸ்டார்க்கின் நண்பனும் மற்றுமொரு பிரபல சூப்பர்ஹீரோவுமான ரோடி கதாபாத்திரத்தை மையப்படுத்தியதாக இருக்கும். Secret Wars தொடரில் நிக் பியூரியாக மீண்டும் தோன்றவுள்ளார் சாமுவேல் எல்.ஜாக்ஸன்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த Moon Knight, She-Hulk மற்றும் Ms. Marvel தொடர்களின் நடிகர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் She-Hulk தொடரில் Hulk கதாபாத்திரமும் இடம்பெறும். இந்த தொடர்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் படங்களுக்கும் தொடர்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விடுமுறைக் கால சிறப்புத் தொடராக 'Guardians of the Galaxy Holiday Special' 2022-ல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 'Guardians of the Galaxy Vol.3' திரைப்படத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் என அறிவித்திருக்கிறார் மார்வெல் ஸ்டுடியோஸின் தலைவர் கெவின் ஃபைகி. க்ரூட் கதாபாத்திரத்தை வைத்தும் ஒரு தொடர் தயாராகவுள்ளது.
படங்கள்
'Black Panther 2' 2022 ஜூலை வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தின் இயக்குநர் ரையன் கூக்ளர் இந்த படத்தையும் இயக்குவார். சமீபத்தில் மறைந்த சாட்விக் போஸ்மனின் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக யாரையும் நடிக்க வைக்கப்போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய பிளாக் பேந்தர் கதாபாத்திரம் ஒன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஏன்ட்மேனின் மூன்றாவது பாகம் 'Ant-Man and the Wasp: Quantumania' தயாரிப்பில் இருக்கிறதென்றும் முந்தைய பாகங்களை இயக்கிய பீடன் ரீட் இந்தப் பாகத்தையும் இயக்குவார் என்றும் அறிவித்திருக்கிறார் கெவின் ஃபைகி. பழைய கதாபாத்திரங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் இடம்பெறும். மார்வெல் காமிக்ஸின் முக்கிய வில்லன்களுள் ஒருவனாகக் கருதப்படும் 'காங் தி கான்க்குவரர்' கதாபாத்திரமும் இந்தப் படத்தில் இடம்பெறும். பிரபல நடிகர் ஜொனாதன் மேஜர்ஸ் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் அடுத்த பாகமான 'Doctor Strange and the Multiverse of Madness' திரைப்படத்திற்கும் அடுத்த ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அடுத்த ஸ்பைடர்மேன் படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட Thor: Love and Thunder படத்தில் பிரபல நடிகர் கிறிஸ்டியன் பேல் நடிக்கிறார் என்பதையும் உறுதிசெய்துள்ளனர். ஒரு Fantastic Four திரைப்படமும் தயாரிப்பில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
-
Star Wars: Rangers of the New Republic
-
Star Wars: Ahsoka
(இவை இரண்டும் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் The Mandalorian-ன் ஸ்பின்-ஆஃப் தொடர்கள்)
-
Star Wars: The Bad Batch
-
Star Wars: Andor
-
Star Wars: The Acolyte
-
Star Wars: Obi-Wan Kenobi
-
Star Wars: A Droid Story
-
Star Wars: Lando
-
Star Wars: Visions
இன்னும் இரண்டு ஸ்டார்வார்ஸ் படங்களும் தயாரிப்பில் இருக்கிறதாம். இண்டியானா ஜோன்ஸின் கடைசி பாகம் ஜூலை 2022-ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது
-
Raya and the Last Dragon (திரைப்படம்)- ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும் டிஸ்னி+-லும் வெளிவரும்.
-
Baymax- Big Hero 6 திரைப்படத்தை மையப்படுத்திய தொடர்
-
Zootopia Plus- Zootopia திரைப்படத்தை மையப்படுத்திய தொடர்
-
Tiana- The Princess and The Frog திரைப்படத்தை மையப்படுத்திய தொடர்
-
Moana திரைப்படத்தை மையப்படுத்திய மியூசிக்கல் தொடர்
-
Encanto (திரைப்படம்)
-
Iwaju- ஆப்பிரிக்க நிறுவனமான Kugali-யுடன் இணைந்து டிஸ்னி தயாரிக்கும் தொடர்
டிஸ்னி+ தொடர்கள்
Pixar Popcorn- பிரபல பிக்ஸார் கதாபாத்திரங்கள் தோன்றும் குறும்படத் தொகுப்பு
Dug Days- Up திரைப்படத்தில் வரும் Dug என்னும் நாயை மையப்படுத்திய தொடர்.
The Cars திரைப்படத்தை மையப்படுத்திய ஒரு தொடர்.
Win or Lose- புதிய கதாபாத்திரங்களைக் கொண்ட புதிய தொடர்
திரைப்படங்கள்
Luca - ஜூன் 2021
Lightyear- டாய் ஸ்டோரி படத்தின் முக்கிய கதாபாத்திரமான Buzz Lightyear-ன் கதையைச் சொல்லும் இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்கப்போகிறார் நடிகர் கிறிஸ் எவன்ஸ். 2022 கோடை விடுமுறையின் போது இந்த படத்தை எதிர்பார்க்கலாம்.
Turning Red - மற்றுமொரு அனிமேஷன் திரைப்படம்.
இந்த விழாவில், இதுவரை மொத்தம் 13.7 கோடி வாடிக்கையாளர்களை டிஸ்னி+ பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது டிஸ்னி. சுமார் ஒரு வருடத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது டிஸ்னி.
என்ன ப்ரோ, அப்டேட் போதுமா?!
source https://cinema.vikatan.com/hollywood/black-panther-2-to-loki-all-announcements-and-trailers-from-disney-investor-day-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக