Ad

சனி, 26 டிசம்பர், 2020

ஐஐடி ஜே.இ.இ (மெயின்) தேர்வு 2021 - விண்ணப்பிப்பது எப்படி? வினாத்தாள் எப்படி இருக்கும்?

J E E Main தேர்வு :

சென்னை, கரக்பூர், மும்பை, கான்பூர், டெல்லி, கௌகாத்தி, ஹைதராபாத், ஜோத்பூர், பாட்னா, இன்டோர், மண்டி, பாலக்காடு, திருப்பதி, தன்பாத் பிலாய் கோவ, ஜம்மு, தார்வால், ரோபார் என்ற இடங்களில் உள்ள I.I.T - ஐஐடி களில் தேர்வு தொழில்நுட்ப படிப்புகளை படிக்க தேர்வு தகுதி தேர்வாகும் அதாவது ஐஐடியில் சேர்ந்து படிக்க, (B.E / B.Tech) JEE - ஜே இ இ மெயின் தேர்வை எழுதி தேர்வு பெற்று பின் JEE (Advanced) எழுதித் தர வரிசையில் இடம் பெற வேண்டும்.

JEE மெயின் தேர்விற்கான அறிவிப்பை தேர்வை நடத்தும் National Testing Agency (NTA) வெளியிட்டுள்ளது.

JEE - ஜேஇஇ மெயின் தர வரிசையை மட்டும் கொண்டு N.I.R (National Institute of Technology), I.I.I.T (Indian Institute of Information Technology) மற்றும் இத்தேர்வின் மதிப்பெண்ணை ஏற்றுக் கொள்ளும் கல்வி நிறுவனங்களில் இடம்பெறலாம்.

IIT Madras

JEE மெயின் தேர்வுகள்:

Paper I : B.E / B.Tech - கணினி வழித் தேர்வு (Computer Based Test)
Paper 2A : B.Arch
  • Part I : கணிதம் (Maths) - கணினி வழித் தேர்வு

  • Part II : நுண்ணறிவு (Aptitude) - கணினி வழித் தேர்வு

  • Part III : வரைதல் (Drawing ) - எழுத்துத் தேர்வு

Paper 2 B : B. Planning
  • Part I : கணிதம் (Maths) - கணினி வழித் தேர்வு

  • Part II : நுண்ணறிவு (Aptitude) - கணினி வழித் தேர்வு

  • Part III : திட்டமிடல் (Planning) - கணினி வழித் தேர்வு

இத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இருக்கும்.

Paper I

கணிதம் : (பிரிவு A- 20 வினாக்கள்)

( பிரிவு B 10 வினாக்கள்)

மொத்தம் 30 வினாக்கள் - 100 மதிப்பெண்கள்

இயற்பியல் : (பிரிவு A- 20 வினாக்கள்)

( பிரிவு B 10 வினாக்கள்)

மொத்தம் 30 வினாக்கள் - 100 மதிப்பெண்கள்

வேதியியல்: (பிரிவு A- 20 வினாக்கள்)

( பிரிவு B 10 வினாக்கள்)

மொத்தம் 30 வினாக்கள் - 100 மதிப்பெண்கள்

மொத்தம் - 90 வினாக்கள் (300 மதிப்பெண்கள்) என்றவாறு இருக்கும்

பிரிவு A : MCQ - வகையில் இருக்கும். சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறையும். எழுதாத விடைக்கு மதிப்பெண் குறையாது.

பிரிவு B –யில் எண்வடிவில்விடையைதரவேண்டும். சரியானவிடைக்கு 4 மதிப்பெண்கள்உண்டு. ஏதேனும்ஐந்துவினாக்களுக்குவிடைதரவேண்டும்தவறானவிடைக்கும், எழுதாதவினாவிற்கும்மதிப்பெண்குறையாது.

Paper : 2 A –

(பிரிவு I - A _ 20 வினாக்கள்)

(B 10 வினாக்கள்) - 100 மதிப்பெண்கள்

பிரிவு II – 50 வினாக்கள் – 200 மதிப்பெண்கள்

பிரிவு III – 2 வினாக்கள் – 100 மதிப்பெண்கள்)

மொத்தம் 82 வினாக்கள் - மொத்த மதிப்பெண்கள் 400 என்று இருக்கும்.

மதிப்பெண் முறை Paper I போன்றே இருக்கும். பிரிவு III - என்பது A 4 - தாளில் செய்ய வேண்டிய வரைதல் தேர்வாகும்.

Paper 2 B –

கணிதம் ( பிரிவு A : 20 வினாக்கள்)

( பிரிவு B : 10 வினாக்கள்) மதிப்பெண்கள் 100

நுண்ணறிவு ( பிரிவு B : 50 வினாக்கள் - மதிப்பெண் 200

திட்டமிடல் : 25 வினாக்கள்- மதிப்பெண் 100)

மொத்தம் - 105 வினாக்கள்

300 மதிப்பெண்கள் என்றவாறு இருக்கும்.

மதிப்பெண் விவரம் Paper I -அமைப்பில் இருக்கும்/

விண்ணப்பிக்க தகுதி:

B.E / B.Tech விண்ணப்பிக்க பன்னிரண்டா ம் வகுப்பில், இயற்பியல், கணிதம், வேதியியல், உயிர் தொழில்நுட்பம், உயிரியல், தொழில் படிப்பு என்ற படங்களில் ஏதேனும் ஒன்று எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
B.Arch விண்ணப்பிக்க பன்னிரண்டா ம் வகுப்பில், இயற்பியல், கணிதம், வேதியியல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
B. Planning விண்ணப்பிக்க, கணிதம் உள்ள பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுகள்

Session 1 (Feb :2021 - 23,24, 25, 26)

Session 2 ( March 2021 - 15, 16, 17, 18)

Session 3 (April 2021 – 27, 28, 29, 30 )

Session 4 ( May 2021 – 24, 25, 26, 27, 28) என்றாவது நடைபெறும்.

தேர்வு

Shift I ( 9 AM to 12 Noon

Shift II ( 3 PM to 6 PM) என்ற நேரங்களில் நடைபெறும்.

இவற்றில் மாணவர்கள் ஒரு தேர்விற்கோ, அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும்போது மிக அதிகமான மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்ப கட்டணம்

Paper I (அல்லது ), Paper 2 A (அல்லது ) Paper 2 B

General / Gen EWS / OBC : ஆண்கள் : Rs. 650

பெண்கள் : Rs.325

SC / ST/ PWD : ஆண்கள் : Rs.325

பெண்கள் : Rs.325

Transgender : ஆண்கள் : Rs.325

பெண்கள் : Rs.325

ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

WWW.nta.ac.in ( அல்லது) jeemain.nta.in என்ற இணையம் வழியாக

16.12.2020 முதல் 16.01.2020 வரைவிண்ணப்பிக்கலாம்



source https://www.vikatan.com/news/education/how-to-apply-for-iit-jee-main-exams-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக