மதுரை - போடி அகலரயில் பாதைத் திட்டம் சுமார் 10 ஆண்டுகளாக தேனி மக்களின் கனவுத் திட்டமாக உள்ளது. ஆமை வேகத்தில் நடந்துவந்த ரயில் பாதைப் பணிகள், கடந்த ஓர் ஆண்டாக வேகமடைந்துள்ளன. ஆற்றுப் பாலங்கள் முதல் ரயில் நிலையங்கள் வரை பணிகள் விறுவிறுவென நடந்துவருகின்றன. அந்தவகையில், முதல்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான 37 கிலோமீட்டர் தூரத்துக்கு அகல ரயில்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்றது.
Also Read: தேனி: போலீஸாரை அலறவிட்ட `டிக்டாக்’ திவ்யா! - என்ன நடந்தது?
அதன் தொடர்ச்சியாக, சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான அகலரயில் பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான அகல ரயில்பாதைப் பணியில், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் உள்ள மலையை உடைத்து அகலப்படுத்தும் பணி நீண்ட காலம் நடைபெற்றது. சுமார் 40 அடி உயரம் வரை இருந்த பாறைகள் வெட்டி அகற்றப்பட்டன. உசிலம்பட்டியில் முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரத்துக்கு சிக்னல்கள், ஆற்றுப் பாலங்கள், சிறு ஓடைப் பாலங்கள் என அனைத்துப் பணிகளும் கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது. அதனை அடுத்து சோதனை ஓட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
Also Read: மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் சர்ச்சை - விலை போகிறதா மலை ரயில்?
அந்தவகையில், தற்போது உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான அகலரயில் பாதையில், ரயில் இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை 50 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட ரயில் இன்ஞ்சின், ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி வரை 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதன் மூலம், அகலர யில் பாதையின் உறுதித் தன்மை சோதிக்கப்பட்டது. ரயில் இன்ஜின் இயக்கப்பட்டதை வழி நெடுங்கிலும் உள்ள மக்கள் பார்த்து ரசித்தனர். அதே நேரத்தில், ஆண்டிபட்டி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்தகட்டமாக, ஆண்டிபட்டி முதல் தேனி வரையிலான அகலரயில் பாதைப் பணிகள் வேகமாக நடந்துவருவதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/broad-gauge-trial-run-held-between-usilampatti-to-andipatti
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக