சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள ஒன்பது விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையிலிருந்த 774 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கல்லூரி வளாகத்திற்குள் யாரும் வராமலும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாமலும், கல்லூரி வளாகம் தனிமைப் படுத்தப்பட்டது.
கடந்த வாரம் ஒரே நாளில் ஐஐடி-யில் பயிலும் நான்கு மாணவர்களுக்குத் தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உணவகத்தில் பணியாற்றும் நான்கு நபர்களுக்குத் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து, உணவகம் மூடப்பட்டு உணவகத்திற்கு வந்து சென்றவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பரிசோதனை செய்ததில் பலருக்கும் தோற்று இருப்பது உறுதியானது.
Also Read: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னும் கொரோனா வருமா... தடுப்பூசி அறிவியல் சொல்வது என்ன?
டிசம்பர் 01-ம் தேதிமுதல் நேற்றுவரை 66 மாணவர்களுக்கும், 05 ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 33 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியில் அனைத்து துறைகளும், உணவகங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை செயல்பட அனுமதி மறுக்கப்ப சென்னை ஐஐடி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்திருக்கிறது.
``கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஐடி மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நிலை சீராக உள்ளது!” - தமிழக சுகாதாரத்துறை
விடுதிகளில் உள்ள 774 நபர்களில் 444 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் வேகப்படுத்தியுள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கிண்டி கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐஐடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/education/104-chennai-iit-students-tested-covid-postive-how-did-it-spread
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக