Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

Facebook: `இன்ஸ்டாகிராமுடன் ஒன்றிணைகிறது மெசேஞ்ஜர்!’ - விரைவில் இணையும் வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கான சாட் அமைப்புகள் இதுவரை தனித் தனியாகவே இருந்துவந்தன. இப்போது ஃபேஸ்புக், இவை இரண்டையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த முதல் அப்டேட் வெளியிடப்பட்டது,

இன்ஸ்டாகிராமுடன் ஒன்றிணைகிறது மெசேஞ்ஜர்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் "இனி இன்ஸ்டாகிராமில் புதிய முறையில் சாட் செய்யலாம்" என்ற தகவல் வந்தது. அப்டேட் செய்து பார்த்தால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் சாட் அமைப்பை மொத்தமாக நீக்கி ஃபேஸ்புக் மெசேஞ்ஜரை சேர்த்திருக்கிறார்கள். ஆம், மெசேஞ்ஜரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இனி இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பவும் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் படத்தில் இன்ஸ்டாகிராமில் 'Direct Message' ஐகான் மெசேஞ்ஜர் ஐகானாக மாறியிருப்பதைப் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் 'Direct Message' ஐகான் மெசேஞ்ஜர் ஐகானாக மாறியிருக்கிறது

Also Read: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

இதிலிருந்து இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இல்லாத ஃபேஸ்புக் பயனர்களுக்கும் இதிலிருந்து மெசேஜ் அனுப்பமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்யவேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது. அதன் முதல்கட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.

2012-ல் இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் டாலருக்கும் 2014-ல் வாட்ஸ்அப்பை 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது ஃபேஸ்புக்.

இப்படிச் செய்வதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் iMessage சேவையை பின்னுக்கு தள்ளமுடியும் என்பதே ஃபேஸ்புக்கின் வியூகம். இதன்படி விரைவில் நாம் அனைவரும் வாட்ஸ்அப்பிலிருந்து ஃபேஸ்புக் நண்பர்களுக்கும், இன்ஸ்டா பாலோயர்ஸுடனும் சாட் செய்யலாம். மொத்த அமைப்பும் end-to-end எனகிரிப்ஷனுடன் இருக்க வேண்டும் என்பதே மார்க் சக்கர்பெர்க்கின் திட்டம்.

இந்த திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்ட்களில் பதிவிடுங்கள்!



source https://www.vikatan.com/technology/tech-news/facebook-begins-merging-instagram-messenger-whatsapp-to-follow

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக