Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

நெல்லைக்கு நாளை வரும் முதல்வர் - அ.தி.மு.க-வினருக்கு கொரோனா பரிசோதனை!

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தென் மாவட்டங்களில் வேகம் பிடித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாகத் தென் மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்

இன்று (6-ம் தேதி) திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆலோசனை நடத்தும் அவர், நாளை (7-ம் தேதி) நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அத்துடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Also Read: `அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!' -கொரோனா தொற்று அச்சத்தில் நெல்லை வனத்துறை

நெல்லைக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் பங்கேற்கும் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவருடன் ஆலோசனை நடத்த உள்ள அ.தி.மு.க-வினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அரசியல்வாதிகள்

``அரசியல்வாதிகள் பலரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் முதல்வர் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் ரிஸல்ட் வந்தவர்கள் மட்டுமே முதல்வரைச் சந்திக்க முடியும்” என்கிறார்கள், அதிகாரிகள்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், செய்தியாளர்கள், அ.தி.மு.க-வினர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/politics/cm-eps-to-visit-nellai-tomorrow

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக