Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஊட்டி: `திசு வளர்ப்பு‌; 5 லட்சம் வீரய‌ ரக வாழை நாற்றுகள்!' - களமிறங்கிய அரசு தாவரவியல் பூங்கா

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள திசு வளர்ப்புக்கூடம், சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக திசு வளர்ப்பு முறையில் ஸ்ட்ராபெரி மற்றும் வீரிய ரக வாழை நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு உரிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

திசு வளர்ப்புக் கூடம்

கடந்த ஆண்டு இந்தக் கூடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட வாழை நாற்றுகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சமவெளிப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த வகை நாற்றுகளை கேட்டுள்ளனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

திசு வளர்ப்புக் கூடம்

Also Read: `15,000 அவரை விதைப் பந்துகள்!’ காய்கறி உற்பத்தியிலும் அசத்தும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

வீட்டுத்தோட்டங்களுக்கான அவரை விதைப்பந்துகள் உள்ளிட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தாவரவியல் பூங்கா, தற்போது 5 லட்சம் வாழை நாற்றுகளை இலக்ககாக் கொண்டு உற்பத்தியை துவக்கியுள்ளது.

திசு வளர்ப்பு‌ முறையில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் குறித்து நம்மிடம் பேசிய பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன்,``தோட்டக்கலைத் துறை மூலம் கடந்த ஆண்டு முதல் இந்தக் கூடத்தில் நேந்திரன், ஜி9 ஆகிய வீரிய ரக வாழைகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி, ஆர்க்கிட் மலர் நாற்றுகள் உருவாக்கப்பட்டன. பூங்காவில் உள்ள பசுமைக் குடிலில் நடவு செய்யப்பட்டு உரிய பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

திசு வளர்ப்பு

கடந்த ஆண்டு மட்டும் கூடலூர், பந்தலூர் மற்றும் சமவெளி பகுதிகளை சேர்ந்த விவசாயிக்கு 5,000 வாழை நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டன. தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய சமவெளி பகுதிகளில் வாழை பயிரிடும் விவசாயிகள் நாற்றுகளைக் கேட்டுள்ளனர். தற்போது, நேந்திரன் மற்றும் ஜி9 ஆகிய 5 லட்சம் வீரிய ரக வாழை நாற்றுகள் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.

Also Read: `நம்பிக்கையில் நடப்படும் 2 லட்சம் மலர் நாற்றுகள்’ - 2வது சீஸனுக்குத் தயாராகும் ஊட்டி பூங்கா

இந்த முறையில் ‌உருவாக்கப்பட்ட வாழை நாற்றுகள் நல்ல விளைச்சலைத் தந்துள்ளன. நேந்திரன் நாற்று ரூ.19-க்கும், ஜி9 நாற்று ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படும். ஜி9 ரக வாழை 10 மாதத்தில் முழு விளைச்சலை அளிக்கும்

திசு வளர்ப்பு வாழை

6 அடி உயரம் வளரும் இந்த வாழை 60 கிலோ எடையில் 6 அடி உயர‌ தார் தரும். நடவு செய்யப்பட்ட அனைத்து நாற்றுகளும் ஒரே நேரத்தில் விளைச்சலைத் தருவதுடன் சீரான அளவிலும் இருக்கும். திசு வளர்ப்புக்கூட உட்கட்டமைப்பை நவீனப்படுத்த உள்ளோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tissue-culture-banana-tree-cultivate-in-ooty-tissue-lab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக