பரமக்குடியில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கருவுறக் காரணமாக இருந்த திருமணமான இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, சத்திரக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிமையில் வசிக்கும் பெண்கள், டூ வீலர்களின் தனியாக பயணிக்கும் இளம்பெண்கள், மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களை ஆசைவார்த்தை பேசியும், மறைமுகமாக பெண்களைப் படப் படம்பிடிப்பதுடன் அதனைக் காட்டி மிரட்டி அப்பெண்களை வன்கொடுமை செய்யும் கும்பல்கள் குறித்த புகார்கள் மாவட்ட காவல்துறையினருக்கு சென்றது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி வருண்குமார் நடவடிக்கையின் விளைவாகப் பலர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
Also Read: ராமநாதபுரம்: `ரூ.6 கோடி; 40 நாள்களில் இரு மடங்கு!’ - இரிடியம் மோசடியில் ஏமாந்த கரூர் நபர்
இந்நிலையில், பரமக்குடியில் 10-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். பரமக்குடி கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ஸ்டீபன் ராஜ். அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை பார்த்து வரும் தம்பதியரின் 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். ஸ்டீபன் ராஜ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில்,தனது வீட்டை அடுத்துள்ள வீட்டில் வசித்து வரும் ஸ்டீபன்ராஜுவின் அம்மாவைப் பார்ப்பதற்காக அந்த மாணவி அடிக்கடி ஸ்டீபன் ராஜுவின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
Also Read: மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு யாரும் இல்லாத போது தனது வீட்டுக்கு வந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ஸ்டீபன்ராஜ். மேலும், இதனை தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதில் பதிவான காட்சிகளை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியபடி கடந்த ஓராண்டாக அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளி நாள்களில் கூட, அந்த மாணவியை பள்ளிக்கு செல்ல விடாமல் விடுமுறை எடுக்க வற்புறுத்தி தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி மற்றும் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பாதிப்புக்குள்ளான அந்த மாணவியின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் ஸ்கேன் எடுத்த போது அந்த மாணவி 9 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதன் பின்னரே தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். இது பற்றி பெற்றோர்கள் ஸ்டீபன்ராஜிடம் கேட்டபோது, உங்களை குடும்பத்தோட காரை ஏற்றிக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்டீபன்ராஜ் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் ஸ்டீபன்ராஜுவை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/social-affairs/crime/paramakudi-police-arrest-man-in-pocso
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக