Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

படிக்குறது அடிக்கடி மறக்குதா! - குழந்தைகளுக்கான டிப்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று பெரும்பாலான குழந்தைகள் அதிக நேரம் ஒரே பாடத்தைப் படித்தாலும், சீக்கிரமாக அதை மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் மேலோட்டமாக பாடத்தைப் படித்துவிட்டு தேர்வில் அதை ஞாபகபடுத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே இவர்களுக்கு எளிமையாக நினைவாற்றலை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்கிறேன்..

எந்தப் பாடத்தை படித்தாலும், அதனை முழுமையாக புரிந்து படிக்க வேண்டும். புரியாமல் எதையும் படிக்கக் கூடாது.

எந்த பாடமாக இருந்தாலும், அதை படித்து முடித்தப்பிறகு எழுதி பார்க்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். ஹோம் வொர்க் என்னும் பெயரில் கடமைக்கு எழுத வைப்பதால் எந்தவிதப் பலனுமில்லை.

Representational Image

உங்கள் குழந்தைகளுக்கு மாவு சத்து உள்ள உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள். ஏனெனில் இது மந்த நிலையை ஏற்படுத்தும். எனவே புரதம் நிறைந்த, எளிதில் செரிமானமாகும் உணவை சாப்பிட கொடுக்கலாம்.

பெற்றோராகிய நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதால், குழந்தைகளும் அதனை விரும்பி பார்ப்பார்கள். எனவே பெரும்பாலும் தொலைக்காட்சியைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டு, உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

படங்களைச் சார்ந்த பாடங்களைப் படிக்கும் போது படத்தை வைத்தே அதற்கான விளக்கத்தை எவ்வாறு தௌpவாகக் குறிப்பிடுவது எனக் கற்றுக் கொடுங்கள்.

படங்களை ஒரு முறைக்கு இருமுறை வரைந்து பார்க்க சொல்லுங்கள். இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கச் சொல்லுங்கள்.

நினைவாற்றல் அதிகரிக்கவும், நோயின்றி வாழவும் நல்ல உறக்கம் மிகவும் அவசியமாகும். எனவே குறைந்தது 8 மணி நேரமாவது தூங்கும் படி பழக்கப்படுத்துங்கள்.

உங்கள் குழந்தைகளை இரவில் சீக்கிரமாக தூங்கி, அதிகாலையில் படிக்கும் படி பழக்கப்படுத்துங்கள்.

தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவுப்படுத்தி பார்க்கச் சொல்லுங்கள். இது மிகவும் முக்கியமான பயிற்சியாகும்.

- ஏ எஸ் கோவிந்தராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-for-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக