கொரோனா பாதிப்பால் இடதுகை சுண்டுவிரல் மற்றும் இடது தொடை மரத்துவிட்டது. நரம்பியல் மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இடது பக்கம் முழுவதுமாக. பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, மாத்திரைகள் பரிந்துரைத்தார். நான். பழையபடி எப்போது நார்மல் நிலைக்கு வருவேன்?
- அருண் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.
`` கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த பலருக்கும் அதைத் தொடர்ந்து இதுபோன்ற பல பாதிப்புகள் தொடர்வதைப் பார்க்கிறோம். முதல் அலையைவிடவும் இரண்டாவது அலையில் `லாங் கோவிட்' எனப்படும் இந்தப் பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. சிலருக்கு நரம்பு மண்டலம், சிலருக்கு கணையம், சிலருக்கு எலும்புகள் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான பாதிப்பைக் காட்டுகிறது கொரோனா. உங்கள் விஷயத்தில் நீங்கள் நரம்பியல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொண்டு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மருத்துவர் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதை நிச்சயம் பரிசோதித்திருப்பார். Peripheral Pulse பார்த்துவிட்டே மருத்துவர் இதை உறுதிசெய்துவிடுவார்.
Also Read: Covid Questions: தடுப்பூசிக்காக இம்யூனோ சப்ரசென்ட் மாத்திரைகளை நிறுத்தினேன்; மருந்து வேலை செய்யுமா?
அதாவது, நோயாளியின் நாடியைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார். தன் கையைப் போலவே நோயாளியின் கையும் கதகதப்பாக இருக்கிறதா என டெஸ்ட் செய்வார். இந்த இரண்டும் நார்மல் என்றால் நோயாளிக்கு தொடுதல் உணர்வு இருக்கிறதா என்று பார்ப்பார். முதல்கட்டமாக ரத்தக்குழாய்களை விரிவுபடுத்தும் மருந்துகள், சத்து மாத்திரைகளைக் கொடுத்துப் பார்ப்பார்கள்.
இந்தச் சிகிச்சைகளுக்குப் பிறகும் மரத்துப்போகும் உணர்வு சரியாகவில்லை என்றால் டாப்ளர் டெஸ்ட்டுக்கு (Doppler test) பரிந்துரைப்பார். அதில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது தெரிந்தால், பயப்படத் தேவையில்லை. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளிலேயே உங்கள் உடல்நிலை பழையபடி மாறிவிடும். ஆனால், நீங்கள் ஒட்டுமொத்த உடலுக்கும் அசைவளிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள் குறைபாடு இருக்கிறதா என்பதையும் சரிபார்த்து அதற்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
Also Read: Covid Questions: கொரோனா குணமான பின் மாஸ்டர் ஹெல்த் செக்கப்; எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்?
இதற்கிடையில் உங்களுக்கு நீரிழிவு, இதய பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி ஏதேனும் இருந்தால் சரியான மருத்துவ ஆலோசனையோடு அவற்றுக்கான சிகிச்சைகளையும் தாமதமின்றித் தொடங்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதோடு, வாரம் ஒருமுறையோ இரு வாரங்களுக்கு ஒரு முறையோ ஹெல்த் செக்கப் செய்துகொள்வதும் நல்லது."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-off-post-covid-numbness-complication
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக