Ad

சனி, 24 ஜூலை, 2021

சானியா மிர்சா - அங்கிதா இணை தோல்வி... டென்னிஸில் இந்தியாவின் பதக்க ஏக்கம் தொடர்கிறது!

டென்னிஸில் இந்தியாவின் கால்நூற்றாண்டு பதக்க ஏக்கத்தை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா இணை முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளது.

உக்ரேனை சேர்ந்த கிச்சனோக் சகோதரிகளுக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் செட்டில் முழு ஆதிக்கம் செலுத்திய சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா இருவரும் அடுத்தடுத்த செட்களை நெருங்கி வந்து தோற்றனர்.

பேறுகால விடுப்புக்கு பிறகு கடந்த ஜனவரியில் டென்னிஸ் களத்திற்கு திரும்பியிருந்த சானியா மிர்சா, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் சிறப்பாக ஆடியிருந்தார். 23 கிலோ எடையை குறைத்து கம்பேக் கொடுத்திருந்த சானியா மிர்சா ஹோபர்ட் சர்வதேச தொடரில் வென்றிருந்தார். விம்பிள்டன் தொடரிலும் நன்றாக ஆடியிருந்தார்.

அனுபவமிக்க சானியா மிர்சாவுடன் இளம் வீராங்கனை மற்றும் இந்தியாவின் தற்போதைய நம்பர் 1 ஆக இருக்கும் அங்கிதா ரெய்னா ஒலிம்பிக்கிற்காக கூட்டணி போட்டார். இருவருக்கும் ஏற்கெனவே ஃபெட் தொடரில் இணைந்து ஆடிய அனுபவம் இருந்தது.

டோக்கியோவில் இந்த கூட்டணி இன்று எதிர்கொண்ட கிச்சனோக் சகோதரிகளில் ஒருவரான நாடியா கிச்சனோக்குடன் இணைந்தே ஹோபர்ட் தொடரை வென்றிருந்தார் சானியா.
சானியா மிர்சா

நெருங்கிய பழக்கமுடைய எதிராளி என்பதால் சாய்னா-அங்கிதா கூட்டணி எளிதில் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடியே முதல் செட்டை 6-0 என வென்று முழு ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இரண்டாவது செட்டில் 7-6 என வெற்றியை நெருங்கி தோற்றனர். இந்த செட்டிலேயே கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு ஆடியிருந்தால் போட்டியை முடித்திருக்கலாம். டை பிரேக்கர் செட்டில் 10-8 என அதிலும் நெருங்கி வந்து தோற்று வெளியேறியிருக்கிறது இந்திய கூட்டணி.

நல்ல தொடக்கத்தை சிறப்பாக முடித்திருந்தால், பதக்கத்தை வெல்லும் வாய்ப்பில் தொடர்ந்து நீடித்திருப்பார்கள். டென்னிஸில் பதக்கத்திற்கான இந்தியாவின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.



source https://sports.vikatan.com/olympics/sania-mirza-ankita-raina-duo-lost-to-ukraines-kichenok-sisters

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக