தேர்தல் முடிந்து அரசியலுக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் லீவு போட்ட பிறகு இப்போது சினிமா பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறார் சீமான். ரொம்ப நாள் தூசு படிந்துபோய் கிடந்த ‘பகலவன்’ ஸ்கிரிப்டை எடுத்துப் பார்த்து, அதை லிங்குசாமியின் ஸ்கிரிப்டோடு யாரோ ஒற்றுமைப்படுத்தி திரி கிள்ளிப்போட பற்றி எரிந்தது பஞ்சாயத்து.
கிட்டத்தட்ட ஆறு கதாநாயகர்களுக்கு மேல் கதைசொல்லிவிட்டதால் எல்லோருக்கும் தெரிந்த கதையாகிவிட்டது ‘பகலவன்’. இப்போது விக்ரமன், பாக்யராஜ் முயற்சியால் பிரச்னையின்றி ஷூட்டிங் லொக்கேஷன் பார்க்க ஹைதராபாத் போயிருக்கும் லிங்குசாமியிடம் பேசினேன்.
‘’சீமானின் ‘பகலவன்’ சாயல் என் கதைக்கு இருக்கிறது என சந்தேகப்பட்டு சங்கத்திற்குப் போக, அங்கே அப்படி எதுவும் இல்லை எனத் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இனிமேலும் சீமான் பிரச்னைக்கு வந்தால் பதிலடி கொடுப்பேன்.
இப்போது ‘அஞ்சான்’ கதையில் சில திருத்தங்கள் செய்து தெலுங்கு படத்தை எடுக்கிறேன் எனக் கதை கட்டிவிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அது. தெலுங்கு படத்தின் முன்னணி ஹீரோ ராம் இந்தக் கதையை கேட்டுச் சந்தோஷமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதையே ட்வீட் போட்டும் மகிழ்ந்திருக்கிறார். இரண்டின் கதைக்களமும் வேறு வேறு. ராம் - கீர்த்தி ரெட்டி காம்பினேஷனில் படம் உருவாகிறது. தீர்க்கமாக யோசித்து உருவான கதை இது. ஒரு நல்ல சினிமாவிற்கான அனைத்து அம்சங்களும் இதில் உண்டு’’ என்றார் லிங்குசாமி.
source https://cinema.vikatan.com/tamil-cinema/seemans-story-is-different-from-mine-says-director-lingusamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக