Ad

புதன், 9 ஜூன், 2021

ஊரடங்கு: மேலும் சில தளர்வுகள்?! - அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை #NowAtVikatan

ஊரடங்கு: மேலும் சில தளர்வுகள்?!

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும், ஊரடங்கு அமல்படுத்தும் நிலையில் கொரோனா பரவியது. தொடர்ந்து தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது தற்போது அமலில் இருக்கிறது.

ஊரடங்கு தளர்வு

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருக்கும் இந்த சூழலில், தளர்வுகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார், இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்வர் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படியில் அடுத்த வாரத்துக்கான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/general-news/10-06-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக