Ad

திங்கள், 21 ஜூன், 2021

அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாறு, படமாக எடுக்கப்படுமா? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அயோத்தி தாசர் என்றால் எனக்கு யாரென்றே தெரியாமல் இருந்தது. எங்கேயும் கேள்விபட்டது கூட இல்லை.

பிறகுதான் இயக்குனர் பா. ரஞ்சித்தின் குரலில் அந்தப் பெயரை கேட்க முடிந்தது. எந்த மேடை, எந்த நிகழ்வு என்று தெரியவில்லை. ஆனால் நன்றாக நியாபகம் இருக்கிறது அது கண்டிப்பாக பா. ரஞ்சித்தின் குரல் தான் என்று. அதே போல 100% நிச்சயமாக தெரியும், அதற்கு முன்பு எந்தப் பிரபலமும் அயோத்தி தாசர் பெயரை எந்த நிகழ்விலும் உச்சரித்தது கூட இல்லை என்று.

"அயோத்தி தாசரை அவர் பற்றிய தகவல்களை மூடி மறைத்த சமூகம் இது" என்று எதோ ஒரு மேடையில் இயக்குனர் பா. ரஞ்சித் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய காலா படத்திலும் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் இயங்கி வரும் அயோத்திதாசர் நூலகத்தை சில காட்சிகளில் பதிவு செய்திருந்தார். அதை ஆனந்த விகடனும் தன்னுடைய காலா விமர்சனத்தில் சுட்டிக்காட்டி இருந்தது.

அயோத்தி தாசர்

பா. ரஞ்சித் குரலுக்குப் பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. பல நூறு ஆசிரிய பெருமக்கள் ஒன்றுதிரண்டு இரவு பகல் பாராமல் மதிப்பிற்குரிய ஆட்சியர் திரு. உதயச்சந்திரன் அவர்களின் தலைமையில் பள்ளிப் பாடநூலில் நிறைய பாடங்களை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டதன் விளைவாக பள்ளிக்கூட புத்தகத்தில் அயோத்தி தாசர் பற்றிய தகவல்களை பார்க்க முடிந்தது.

*அயோத்தி தாசரின் இயற்பெயர், ஆசிரியர் பெயர்,

*அயோத்தி தாசர் நடத்திய பத்திரிக்கை பெயர்,

*அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் முன்னோடி அயோத்தி தாசர் போன்ற தகவல்களை எல்லாம் பாட புத்தகத்தில் காண முடிந்தது.

இந்நிலையில் பெரியார், அம்பேத்கர் போன்ற வாழ்க்கை வரலாற்று படங்களை போல அயோத்தி தாசருடைய வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்றும் பெரியார் படத்தில் சத்தியராஜ், அம்பேத்கர் படத்தில் மம்முட்டி நடித்ததைப் போல அயோத்தி தாசருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டும் என்றும் அதில் ஏதேனும் முன்னணி நடிகர் நடிக்க வேண்டும் என்பதும் என் ஆசை.

சமீப காலங்களாக வட இந்திய சினிமாக்களிலும் தென்னிந்திய சினிமாக்களிலும் நிறைய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் உருவாகி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் அயோத்தி தாசரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு அது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் அனைத்து பள்ளிகளிலும் ஒளிரும் என எதிர்பார்க்கிறேன்.

- யுவராஜ் மாரிமுத்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-his-wish-regarding-iyodhee-thass-biopic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக