Ad

திங்கள், 21 ஜூன், 2021

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் பல் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளலாமா?

எனக்கு வயது 35. பல் சொத்தையாகி அதனை அகற்ற வேண்டிய நிலையில் உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டு, எத்தனை நாள்களுக்குப் பிறகு பல்லை அகற்றலாம்?அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் உள்ளனவா?

- ராகுல் (விகடன் இணையத்திலிருந்து)

பல் மருத்துவர் மரியம் சஃபி

Also Read: Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.

``நிறைய பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கிறது. கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும், பல் அகற்றும் சிகிச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் என மூன்றுவிதமான தடுப்பூசிகள் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன. நீங்கள் முதலில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டுக்கொள்ளுங்கள்.

பெரும்பாடு பட்டு இப்போதுதான் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறோம். அதற்குள் மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்ற கணிப்புகள் கிளம்பியுள்ளன. அதிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

COVID-19 vaccine

Also Read: Covid Questions: கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து ரத்ததானம் செய்யலாம்?

உங்களுக்கு சொத்தைப் பல்லின் தீவிரம் அல்லது வேறு பிரச்னைகளைப் பொறுத்துதான் அதை அகற்ற வேண்டும் என உங்கள் பல் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். உங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் மட்டும் உங்கள் பல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அவர்கள் அதற்கேற்ப பல் நீக்கும் சிகிச்சையைத் திட்டமிடுவார்கள். அதற்குத் தயார்படுத்த ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணிகளைப் பரிந்துரைப்பார்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நீங்கள் பல்லை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பல்லை எடுத்த பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அது உங்கள் முடிவு. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதை மட்டும் எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்தாதீர்கள்.".

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/when-can-one-undergo-tooth-removal-procedure-after-taking-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக