Ad

திங்கள், 21 ஜூன், 2021

கேரளா: 4 கார், 15 பேர்.. தங்கக் கடத்தல் கும்பலின் சேஸிங்! - சாலை விபத்தின் அதிர்ச்சிப் பின்னணி

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே, சொகுசு காரும், லாரியும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காரில் பயணித்த அந்த 5 பேரும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முகமது நாசர், சுபைர், அஸைனர், முகமது சஹிர், தாஹிர் ஆகிய 5 பேரும்,

விபத்து

Also Read: கேரளா: மன் கி பாத் உரை; தைவான் நாட்டு விருது! - வேம்பநாடு ராஜப்பனிடம் பண மோசடி?

நண்பர் ஒருவரை வழியனுப்ப கோழிக்கோடு விமான நிலையம் சென்றுவிட்டு, திரும்பும் வழியில் விபத்து நடந்ததாக முதலில் தகவல் வெளியானது. கனமழையும், அதிக வேகமும் தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது விபத்தில் உயிரிழந்திருப்பது தங்கக் கடத்தல் கும்பல் என்றும், அவர்களை மற்றொரு தங்கக் கடத்தல் கும்பல் பின்தொடர்ந்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை துபாயில் இருந்து வந்த மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது செபிக் 2.330 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

கோழிக்கோடு விமான நிலையம்

அவரிடம் இருந்து தங்கத்தை வாங்குவதற்காகதான் இந்த 5 பேரும் விமான நிலையம் முன்பு காத்திருந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக அதிகாரிகளிடம் சிக்கிவிட்டார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் காத்திருந்தவர்கள் வேகமாக கிளம்பியுள்ளனர். இந்நிலையில் போலீஸார் தகவல்படி, மொத்தம் 4-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கடத்தல் காரர்கள் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் விபத்துக்குள்ளான இடத்தில் 4 கார்கள் இருந்துள்ளன. அதிலிருந்த 15 இளைஞர்களும் மற்றொரு தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்.

கார் விபத்து

உயிரிழந்த 5 பேரும் செபிக்கிடம் தங்கம் வாங்கிவிட்டு செல்வதாக நினைத்து, அந்த தங்கத்தை பறிக்க அவர்களின் எஸ்.யூ.வி காரை வேகமாக சேஸ் செய்துள்ளனர். அவர்கள், தங்களை விரட்டுவதால் இவர்களும் அதிவேகமாக சென்றுள்ளனர்.

அப்போதுதான் எஸ்.யூ.வி கார் லாரியில் மோதி விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழந்த முகமது நாசர், தாஹிர் ஆகியோர் மீது பாலக்காடு காவல்நிலையங்களில் ஏற்கெனவே கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையம், தங்கக் கடத்தல் ஹப்பாக உள்ளது.

கடத்தல் தங்கம் (கோப்புப் படம்)

கடந்த இரண்டு நாள்களில் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேராளவில் கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த கும்பலை பின்தொடர்ந்த, மற்றொரு கும்பலை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kerala-car-accident-and-gold-smuggling-a-detailed-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக