Ad

செவ்வாய், 22 ஜூன், 2021

மதுரை: நடிகர் விஜய் பிறந்தநாள்! - ஏழை மாணவர்களின் ஒரு வருட கல்விக்கு உதவிய மக்கள் இயக்கத்தினர்

நடிகர் விஜய்யின் 47-வது பிறந்தநாளில் தனியார் பள்ளியில் பயிலும் 47 ஏழை மணவர்களின் ஒரு வருட கல்விச்செலவுக்கான தொகையை வழங்கி ஆச்சரியப்படுதியுள்ளார்கள் மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.

கல்வி உதவி

கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் சமூக இடைவெளியுடன் தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் 47 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் விஜய் ரசிகர்கள்.

அதிலும் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் நாளைய முதல்வரே, எங்களை காக்கும் கபசுரரே, எங்கள் கவலைகளின் தடுப்பூசியே என்று அதகளம் பண்ணியிருந்தார்கள்.

விஜய்

பல பகுதிகளில் இனிப்பு வழங்குவது, நலத்திட்ட உதவிகள், கொரோனா நிவாரணம் வழங்குவது பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என பிறந்தநாளை கொண்டாடி தீர்த்தார்கள்.

இதில், மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கல்லானை நடத்திய விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கல்வி உதவி

அதில் முக்கியமாக தனியார் பள்ளிகளில் பயிலும் எளிய குடும்பத்தை சேர்ந்த 47 மாணவர்களுக்கு ஒரு வருட கல்விச்செலவுக்கான தொகையை அவர்களிடம் வழங்கி கொரோனா ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களை மகிழ்ச்சியடைய வைத்தார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/fans-helping-to-poor-students-on-actor-vijay-borthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக