Ad

ஞாயிறு, 6 ஜூன், 2021

தென் மாவட்ட மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் - மதுரை வந்தது 6-வது ரயில்

கொரோனா 2-ம் அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் விநியோகம்.

கூடல் நகர் ரயில் நிலையம்

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க, நாட்டில் பல இடங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய அரசும், அண்டை மாநிலங்களும் தேவையான மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கிறது.

அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை 50 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்கள் வந்துள்ளன. அதில் தென் மாவட்டங்களுக்கான 6-வது எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரை வந்தது.

ஆக்ஸிஜன் ரயில்

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 89.2 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்த 4 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் இதுவாகும். ஏற்கனவே மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் வந்துள்ளது.

ரயிலில் வந்த ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் கூடல்நகர் ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டன.

ஆக்ஸிஜன் ரயில்

இந்த எக்ஸ்பிரஸையும் சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை 3,404.85 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன், ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், தென் மாவட்டங்களுக்கு மட்டும் இதுவரை 435.19 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயிலில் வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சரி செய்யப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/news/general-news/6th-oxygen-express-reaches-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக