திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24). கூலித் தொழிலாளியான வெங்கடேசனுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில் அவரது மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக வெங்கடேசனைப் பிரிந்து தன் தாய் வீட்டில் குழந்தையுடன் திருத்தணி டவுன் அருகே வசித்து வருகிறார். மனைவியைப் பிரிந்த நிலையில், கண்டிகை பகுதியில் தனியாக வசித்து வந்த வெங்கடேசன் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் கடந்த சில மாதங்களாக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். தனக்குத் திருமணம் ஆகி விட்டதை மறைத்த வெங்கடேசன், பள்ளி மாணவியிடம் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியவே, அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரித்திருக்கின்றனர். அப்போது மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுடன் தான் சில மாதங்களாக பழகி வந்ததாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மாணவியின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போன அவரது பெற்றோர் உடனடியாக திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தங்கள் மகளை அழைத்துச் சென்று புகார் அளித்திருக்கின்றனர். மாணவியின் புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்த திருத்தணி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சத்தியவாணி போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காகக் கூலித் தொழிலாளி வெங்கடசேனை கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார். நீதிமன்றத்தில் வெங்கடேசன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி வெங்கடேசனுக்குச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதனையடுத்து, போலீஸார் வெங்கடேசனைத் திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-a-youngster-who-sexually-harassed-a-school-student-in-tiruttani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக