Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

Live Updates: 72-வது குடியரசு தினம்: சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர்!

ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது!

ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரி உட்பட மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவருக்கு மத்திய அரசு சார்பில் வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா பதக்கங்கள்! 

தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி, தொடர்ந்து சிறந்த காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா! #HappyRepublicDay2021

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா! #HappyRepublicDay2021

Posted by Vikatan EMagazine on Monday, January 25, 2021

தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார் ஆளுநர். நிகழ்ச்சியில் முப்படைகளின் சாதனை விளக்க அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

சென்னையில் குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் முதல்வர், துணை முதல்வர்
சென்னையில் குடியரசு தின விழா
சென்னையில் குடியரசு தின விழா
சென்னையில் குடியரசு தின விழா

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/general-news/live-updates-on-republic-day-celebrations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக