சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நேற்றிரவு இருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத்கண்ணா மற்றும் மைனர் மணி என்ற அருள்நாதன். நெருங்கிய நண்பர்களான இருவரின் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் அவர்களுக்கு எதிரிகளும் அதிகம் என்கிறார்கள். இந்நிலையில், இருவரும் நேற்றிரவு மானாமதுரை கோர்ட் எதிரே உள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வினோத் கண்ணா, அருள்நாதன் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
Also Read: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு- துப்பாக்கி வாங்கிக் கொடுத்த பயங்கரவாதி சென்னையில் கைது!
பின்னர் மர்ம கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். இதைப் பார்த்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். ஆபத்தான நிலையில் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அருள்நாதன் இறந்தார். வினோத்கண்ணா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து மானாமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழியாக நடந்துள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் தொடர்சியாகத் தற்போது பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்கிறோம். அருள் நாதன் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோர் மீதான வெட்டுக்காயங்களைப் பார்க்கையில், கூலிப்படை, ரௌடிக் கும்பலின் வேலையாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே, கொலை செய்த மர்ம கும்பலை விரைவில் பிடித்துவிடுவோம்’’ என்றனர்
source https://www.vikatan.com/news/crime/un-identified-persons-attacks-two-one-died-in-manamadurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக