Ad

புதன், 6 ஜனவரி, 2021

``அமெரிக்க வரலாற்றின் இருண்ட தருணம்; இது தேச துரோகத்தின் எல்லை!" - ஜோ பைடன் காட்டம்

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர்ந்து அமெரிக்கவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி வருகின்றனர்.

ட்ரம்ப் - ஜோ பைடன்

இந்நிலையில், ஜோ பைடனின் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பை மீறி அமெரிக்க கேபிடல் (US Capitol) கட்டடத்திற்குள் நுழைந்து அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் பணியை மேற்கொண்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் தொடர்பாக பேசிய ஜோ பைடன், ``அமெரிக்கா வரலாற்றின் இத்தகைய இருண்ட தருணம் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுத்தி இருக்கிறது" என்றார்.

போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்

மேலும் அவர், ``இந்த நேரத்தில், நமது ஜனநாயகம் முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நவீன காலங்களில் நாம் கண்ட எதையும் போலில்லாமல், அமெரிக்க கேபிடல் மீது தாக்குதல் நடந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கேபிடல் ஹில் காவல்துறை மீதான தாக்குதல் சம்பவமும் நடைபெற்றுள்ளது.

நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். கேபிட்டலில் குழப்பத்தை ஏற்படுத்திய காட்சிகள் ஒரு உண்மையான அமெரிக்காவை பிரதிபலிக்கவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகளின் செயல்கள் மட்டுமே. இது கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்டது அல்ல. இது அவர்கள் ஏற்படுத்திய குழப்பம் மட்டுமே. இதுவே தேசத்துரோகத்தின் எல்லையாகும். அது இப்போதே முடிவடைய வேண்டும்" என்றார் ஜோ பைடன்.

கேபிட்டல் கட்டத்தில் அத்துமீறி நுழைந்த ஆதரவாளர்கள்

மேலும், `ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்த முற்றுகைக்கு, முற்றுப்புள்ளி வைக்கவும் அதிபர் ட்ரம்ப் தனது உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய தொலைக்காட்சி மூலம் தன் ஆதரவாளர்களிடம் பேச வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்" புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்.

செனட் சபை

இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி, அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்திற்கு பதிலளிப்பதற்கு உதவுமாறு தேசிய காவலர் மற்றும் பிற கூட்டாட்சி பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/biden-slams-the-trump-supporters-for-the-attack-on-capitol

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக